ஆசிய கோப்பை 2025 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சூரியகுமார் யாதவ் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள அந்த அணியில் ஜெய்ஸ்வால், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் கழற்றி விடப்பட்டது பலரையும் ஏமாற்றமடைய வைத்துள்ளது. ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டிலேயே அதிரடியாக விளையாடும் ஸ்டைலை கொண்டுள்ள ஜெய்ஸ்வால் டி20 போட்டிகளில் இந்தியாவுக்காக ஏற்கனவே அறிமுகமாகி 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சதத்தை அடித்துள்ளார்.
அதே போல 2024 ஐபிஎல், சயீத் முஷ்டாக் அலி டி20 கோப்பைகளை கேப்டனாக வென்ற ஸ்ரேயாஸ் ஐயர் கடந்த ஐபிஎல் தொடரில் 604 ரன்கள் அடித்தார். அதனால் பஞ்சாப்பை 11 வருடங்கள் கழித்து இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்ற அவர் இந்திய டி20 அணியின் துணைக் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு ஆசியக் கோப்பையில் ரிசர்வ் வீர்கள் பட்டியலில் கூட இடம் கிடைக்கவில்லை.
ஸ்ரேயாஸ் ஐயருக்கு டாட்டா:
மறுபுறம் சுப்மன் கில் ஒருநாள் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி தரவரிசையில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருக்கிறார். அதே போல டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாற்றமாக விளையாடி வந்த அவர் சமீபத்திய இங்கிலாந்து தொடரில் 754 ரன்கள் அடித்தார். அதனால் பல சாதனைகளைப் புரிந்து அவர் கேப்டனாக இந்தியா தொடரை சமன் செய்ய உதவினார்.
அதற்காக ஸ்ரேயாஸை கழற்றி விட்டு அவரை திடீரென தேர்வுக்குழு டி20 கிரிக்கெட்டில் துணை கேப்டனாக தேர்ந்தெடுத்துள்ளது பல ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் ஸ்ரேயாஸ் ஐயரை தேர்ந்தெடுக்க இந்திய அணியில் இடமில்லை என்று தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார். எனவே ஸ்ரேயாஸ் ஐயர் மேலே எந்த தவறும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
அகர்கர் விளக்கம்:
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஸ்ரேயாஸை பொறுத்த வரை, யாருக்கு பதிலாக அவரை இந்திய அணியில் தேர்ந்தெடுக்கலாம் என்பதை நீங்கள் (ரசிகர்கள், செய்தியாளர்கள்) அனைவரும் சொல்ல வேண்டும். அவர் மேலே எந்த தவறும் இல்லை. எங்கள் மீதும் எந்த தவறும் இல்லை. தற்சமயத்தில் எங்களால் 15 பேர் கொண்ட அணியை மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும்”
இதையும் படிங்க: 2025 ஆசிய கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு – முழு லிஸ்ட் இதோ
“எனவே அவர் தன்னுடைய வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும். கில், ஜெய்ஸ்வால் விளையாட தயாராக இல்லாத நேரத்தில் அபிஷேக், சாம்சன் விளையாடினார்கள். அபிஷேக் ஷர்மா தற்போது நன்றாக பேட்டிங் மற்றும் பவுலிங் செய்து வருவதாலயே அவரை தேர்ந்தெடுத்துள்ளோம். ஜெய்ஸ்வாலை தேர்ந்தெடுக்காதது துரதிஷ்டவசமானது” என்று கூறினார்.



