நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் எதிர்வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி முதல் செப்டம்பர் 28-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்று விளையாட இருக்கும் இந்த தொடரின் இறுதிப்போட்டி வரை சென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்களின் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த தொடரில் இந்திய அணி நடப்பு சாம்பியனாக பங்கேற்க இருக்கிறது.
2025 ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி இதோ :
இந்த தொடருக்கான ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன. அதேவேளையில் பி பிரிவில் இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஹாங்காங் அணிகள் இடம் பெற்றுள்ளன. இந்த தொடருக்கான வீரர்களின் பட்டியலை பல்வேறு அணிகளும் அறிவித்து வருகின்றன. அந்த வகையில் இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.
அதன்படி இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பில் : ஆசிய கோப்பை தொடருக்கான கேப்டனாக சூரியகுமார் யாதவ் தான் இந்திய அணியை வழிநடத்துவார் என்றும் துணை கேப்டனாக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்களை தவிர்த்து 13 வீரர்களுடன் சேர்த்து மொத்தம் 15 பேர் கொண்ட இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது.
இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜெய்ஸ்வால், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்க மறுக்கப்பட்டு தொடர்ச்சியாக இந்திய டி20 அணியில் விளையாடி வரும் இளம் வீரர்கள் தக்க வைக்கப்பட்டுள்ளனர். மற்றபடி பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிராஜுக்கு இந்த தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
அதேவேளையில் ஜஸ்ப்ரீத் பும்ரா மீண்டும் இந்திய டி20 அணிக்கு கம்பேக் கொடுத்துள்ளார். துவக்க வீரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளனர். மிடில் ஆர்டரில் திலக் வர்மா, ஷிவம் துபே, ஹார்டிக் பாண்டியா, ரிங்கு சிங் போன்ற வீரர்களையும் தக்கவைத்துள்ளது. சுழற்பந்து வீச்சாளர்களாக அக்சர் பட்டேல், வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
சஞ்சு சாம்சனுக்கு பேக்கப் வீரராக ஆர்.சி.பி அணியில் அசத்திய ஜிதேஷ் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். வேகப்பந்து வீச்சாளர்களாக பும்ராவுடன், அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 2025 ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் இதோ :
இதையும் படிங்க : நல்லா பவுலிங் போடும்போது தான் அவரை கழட்டி விட்டாங்க.. இந்திய அணியின் நிர்வாகத்தை விளாசிய – பரத் அருண்
1) சூரியகுமார் யாதவ்(கேப்டன்), 2) சுப்மன் கில் (து.கேப்டன்), 3) அபிஷேக் சர்மா, 4) திலக் வர்மா, 5) ஹார்டிக் பாண்டியா, 6) ஷிவம் துபே, 7) அக்சர் படேல், 8) ஜிதேஷ் சர்மா, 9) ஜஸ்ப்ரீத் பும்ரா, 10) அர்ஷ்தீப் சிங், 11) வருண் சக்கரவர்த்தி, 12) குல்தீப் யாதவ், 13) சஞ்சு சாம்சன், 14) ஹர்ஷித் ராணா, 15) ரிங்கு சிங்.



