பண்ட் உதவிருக்காரு.. சர்பராஸ் கான் குண்டா இருக்காருன்னு நினைக்காதீங்க.. ஆஸிக்கு போவாரு.. சூரியகுமார்

Suryakumar Yadav
- Advertisement -

பெங்களூருவில் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. அதனால் இந்திய மண்ணில் 36 வருடங்கள் கழித்து ஒரு டெஸ்ட் போட்டியில் வென்ற நியூசிலாந்து 1 – 0* (3) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. அதனால் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெறவும் இத்தொடரை வெல்லவும் அடுத்த 2 போட்டிகளில் இந்தியா வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக பெங்களூருவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 46க்கு ஆல் அவுட்டாகி மோசமான சாதனை படைத்தது. இருப்பினும் இரண்டாவது இன்னிங்ஸில் 462 ரன்கள் குவித்த இந்தியா குறைந்தபட்சம் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்தது. அதற்கு தனது முதல் சதத்தை அடித்து 150 ரன்கள் குவித்த சர்பராஸ் கான் முக்கிய காரணமாக அமைந்தார்.

- Advertisement -

திறமையான சர்பராஸ்:

கடந்த இங்கிலாந்து தொடரில் அறிமுகமாகி அடுத்தடுத்த அரை சதங்கள் அடித்த அவர் தற்போது நியூசிலாந்துக்கு எதிராகவும் சதமடித்துள்ளார். அதனால் அடுத்த மாதம் நடைபெறும் ஆஸ்திரேலிய தொடரில் சர்பராஸ் கான் இந்தியாயாவுக்காக விளையாடத் தேர்வாக வாய்ப்புள்ளது. இந்நிலையில் சர்பராஸ் கான் பார்ப்பதற்கு கொஞ்சம் குண்டாக பருமனாக இருந்தாலும் பெரிய ஸ்கோர் அடிக்கும் திறமை கொண்டவர் என்று சூரியகுமார் யாதவ் பாராட்டியுள்ளார்.

அதே சமயம் ஆஸ்திரேலிய தொடருக்கு முன் ஃபிட்னெஸில் முன்னேறுவதற்காக அவருக்கு ரிஷப் பண்ட் ஸ்பெஷல் சமையல்காரரை நியமித்து உதவியுள்ளதாகவும் சூரியகுமார் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சர்பராஸ் கானுடைய உடல் வடிவம் அவரை குண்டாக காட்டுகிறது. ஆனால் 450 பந்துகளை எதிர்கொண்டு இரட்டை சதம், முச்சதம், 150 ரன்களை அடிக்கச் சொன்னால் அதைச் செய்யும் திறன் அவரிடம் உள்ளது”

- Advertisement -

ரிஷப் பண்ட் உதவி:

“இந்திய அணிக்கும் அது போன்ற பெரிய சதங்கள் அடித்து போட்டியை மாற்றக்கூடிய வீரர் தான் தேவை. போட்டி நாள் உட்பட அவர் எப்போதும் பயிற்சியை தவிர்த்து நான் பார்த்ததில்லை. சர்பராஸ் கான் இந்திய அணியின் உடல் பயிற்சியாளருடன் தனது ஃபிட்னஸில் வேலை செய்து வருகிறார். அவருடைய உணவு முறைகளை கவனித்துக் கொள்வதற்காக ரிஷப் பண்ட் ஒரு சமையல்காரரை கொடுத்துள்ளார்”

இதையும் படிங்க: புதிய பந்தில் கூட விக்கெட் எடுக்கல.. அடுத்த போட்டியில் சிராஜுக்கு பதில் அவரை கொண்டு வாங்க.. சபா கரீம்

“எனவே ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடருக்கு முன் அவருடைய உடல் நல்ல வடிவத்தை பெறும். கிரிக்கெட்டில் ஃபிட்னஸ் மிகவும் முக்கியம். வயதாகும் போது உடலும் மாறுபடும். எனவே அதற்காக தற்போது அவர் வேலை செய்து வருகிறார். அதனால் அவருக்கு நல்ல வருங்காலம் இருக்கிறது” என்று கூறினார்.

Advertisement