- Advertisement -
இந்திய கிரிக்கெட்

2026 டி20 உ.கோ டீமை ரெடி பண்ணிக்கிட்டு இருக்கோம்.. அதுல சாம்சனுக்கு இந்த வாய்ப்பிருக்கு.. சூரியகுமார் பேட்டி

இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று துவங்குகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் சமீபத்தில் இந்தியா அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்தது. இருப்பினும் சூரியகுமார் யாதவ் தலைமையில் இலங்கை, வங்கதேசம், தென்னாபிரிக்க அணிகளுக்கு எதிராக டி20 தொடர்களில் அடுத்தடுத்து இந்தியா வெற்றிகளை பெற்றுள்ளது.

முன்னதாக 2024 டி20 உலகக் கோப்பை வெற்றியுடன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஓய்வு பெற்றார்கள். அதைத்தொடர்ந்து சூரியகுமார் யாதவ் இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்ததாக 2026 டி20 உலகக் கோப்பை இந்திய மண்ணில் நடைபெற உள்ளது. அந்தத் தொடரில் சூரியகுமார் தலைமையில் நடப்பு சாம்பியனாக களமிறங்கும் இந்தியா சொந்த மண்ணில் கோப்பையை தக்க வைக்க முயற்சிக்கவுள்ளது.

- Advertisement -

அடுத்த அணி:

இந்நிலையில் 2026 டி20 உலகக் கோப்பைக்கு தேவையான இந்திய அணியை இப்போது முதலே உருவாக்கி வருவதாக சூரியகுமார் தெரிவித்துள்ளார். அதில் இப்போது போலவே தொடர்ந்து விளையாடினால் சஞ்சு சாம்சனுக்கு விக்கெட் கீப்பராகவும் துவக்க வீரராகவும் வாய்ப்பு கொடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். இது பற்றி சூரியகுமார் பேசியது பின்வருமாறு.

“உலகக் கோப்பைக்கு முன்பாக இன்னும் நிறைய காலங்கள் இருக்கின்றன. அந்த தொடரைப் பற்றி இப்போதே நான் சிந்திக்க விரும்பவில்லை. இவை அனைத்தும் அதற்கு தேவையான அணியை உருவாக்குவதை பற்றியதாகும். எந்த இடத்தில் எந்த பேட்ஸ்மேன் வேண்டும்? எந்த பவுலர் தங்களுடைய நாளில் ஒற்றை ஆளாக வெற்றியை பெற்றுக் கொடுக்க முடியும்? என்பது பற்றி சிந்தித்து வருகிறோம்”

- Advertisement -

கீப்பராக சாம்சன்:

“அதற்கு முன் இதை அனைத்தும் ஒரே அணியாக விளையாடுவதை பற்றியதாகும். தற்சமயத்தில் விக்கெட் கீப்பர் பற்றி எந்த கேள்வியும் இல்லை கடந்த 7 – 8 போட்டிகளில் சஞ்சு மிகவும் சிறப்பாக விளையாடியுள்ளார். சொல்லப்போனால் கடந்த பத்து வருடங்களில் அவர் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். விக்கெட் கீப்பராக தம்மால் எப்படி செயல்பட முடியும் என்பதை காண்பித்துள்ளார்” எனக் கூறினார்.

இதையும் படிங்க: 2024 டி20 உ .கோ மாதிரி.. இந்தியா சாம்பியன்ஸ் ட்ராபி ஜெய்க்க அந்த 2 பேரும் வேணும்.. கைப் வெளிப்படை

இருப்பினும் விக்கெட் கீப்பர் இடத்திற்கு ரிஷப் பண்ட், துருவ் ஜுரேல், இஷான் கிசான் போன்ற வீரர்கள் போட்டிக்கு இருக்கிறார்கள். அதே போல ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ருதுராஜ் போன்ற வீரர்கள் ஓப்பனிங் இடத்திற்கு போட்டிக்காக காத்திருக்கிறார்கள். அவர்களை தாண்டி இடம் பிடிக்க சாம்சன் தொடர்ந்து அசத்த வேண்டியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -