- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அந்த ஆஸி வீரர் தனியாளாக இந்தியாவை சாய்ச்சுட்டாரு.. அபிஷேக் மாற மாட்டாருன்னு நம்புறேன்.. சூரியகுமார் வருத்தம்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் 2 – 1 (3) என்ற கணக்கில் இந்தியா தோற்றது. அடுத்ததாக நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. 2வது போட்டியில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 1 – 0* என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றது.

அக்டோபர் 31ஆம் தேதி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 18.4 ஓவரில் 125க்கு ஆல் அவுட்டானது. முக்கிய வீரர்கள் யாருமே 10 ரன்கள் தாண்டாத நிலையில் அதிகபட்சமாக அபிஷேக் சர்மா போராடி 68 (37) ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக ஜோஸ் ஹேசல்வுட் 4 ஓவரில் 13 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

இந்தியா தோல்வி:

அடுத்து விளையாடிய ஆஸ்திரேலியா 13.2 ஓவரில் 126/6 ரன்களை அடித்து எளிதாக வென்றது. அதிகபட்சமாக கேப்டன் மிட்சேல் மார்ஷ் 46 ரன்கள் எடுத்து அசத்தினார். இந்தியாவுக்கு ஜஸ்ப்ரித் பும்ரா 2 குல்தீப் யாதவ் 2, வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகள் எடுத்தும் இந்தியா தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் இப்போட்டியில் பவர் பிளேவில் இந்தியா 4 விக்கெட்டுகளை இழந்ததே தோல்விக்கு காரணம் என்று கேப்டன் சூரியகுமார் தெரிவித்துள்ளார். அந்த பகுதியில் 3 விக்கெட்டுகள் எடுத்த ஹேசல்வுட் கிட்டத்தட்ட தனியாளாக இந்தியாவை தோற்கடித்ததாகவும் அவர் பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கண்டிப்பாக ஹேசல்வுட் பவர் பிளே ஓவர்களில் பந்து வீசிய விதம் சிறப்பாக இருந்தது”

- Advertisement -

சூரியகுமார் வருத்தம்:

“அங்கே நீங்கள் ஆரம்பத்திலேயே 4 விக்கெட்டுகள் இழந்தால் அதிலிருந்து மீண்டு வந்து வெற்றி பெறுவதற்கு கடினம். நன்றாக பந்து வீசிய அவருக்கு பாராட்டுக்கள். அபிஷேக் ஷர்மா இப்படி நீண்ட காலமாக விளையாடி வருகிறார். தன்னுடைய ஆட்டத்தையும் அடையாளத்தையும் தெரிந்து வைத்துள்ள அவர் எதையும் மாற்றாதது நல்லது. அதுவே அவருக்கு வெற்றியைக் கொடுக்கிறது”

இதையும் படிங்க: இந்திய அணியை இவ்ளோ ஈஸியா வீழ்த்த இவரே காரணம்.. வெற்றிக்கு பிறகு – மிட்சல் மார்ஷ் மகிழ்ச்சி

“இந்த அணுகு முறையில் அவர் அப்படியே நின்று இன்னும் இது போன்ற நிறைய ஆட்டத்தை எங்களுக்கு கொடுப்பார் என்றும் நம்புகிறேன். வெற்றிக்கு நாங்கள் கடந்த போட்டியில் செய்ததை மீண்டும் செய்ய வேண்டும். நாங்கள் முதலில் பேட்டிங் செய்தால் நல்ல ஸ்கோர் அடிக்க வேண்டும். பந்து வீசினால் இலக்கை கட்டுப்படுத்த வேண்டும்” என்று கூறினார்.

- Advertisement -