வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2 – 0 (2) என்ற கணக்கில் இந்தியா வென்றது. இதைத்தொடர்ந்து வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா விளையாடும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் அக்டோபர் 6ஆம் தேதி துவங்குகிறது. அத்தொடரின் முதல் போட்டி குஜராத் மாநிலத்தில் இருக்கும் குவாலியர் நகரில் துவங்குகிறது.
கடைசியாக 2010ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் 200* ரன்கள் குவித்து வரலாறு படைத்த பின் இடிக்கப்பட்ட அந்த மைதானம் தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது. அந்த மைதானத்தில் துவங்கும் இத்தொடரில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா வெல்லும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். குறிப்பாக புதிய கேப்டன் சூரியகுமார் தலைமையில் இலங்கையில் பெற்ற வெற்றியை இங்கேயும் இந்தியா தொடரும் என்று நம்பப்படுகிறது.
புதிய ஓப்பனிங் ஜோடி:
முன்னதாக இந்த தொடரில் சுப்மன் கில், ஜெய்ஸ்வால், ருதுராஜ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. அதனால் துவக்க வீரர்களாக களமிறங்கப் போவது யார் என்ற கேள்வி காணப்பட்டது. இந்நிலையில் அபிஷேக் ஷர்மாவுடன் துவக்க வீரராக சஞ்சு சாம்சன் விளையாடுவார் என்று கேப்டன் சூர்யகுமார் அறிவித்துள்ளார். அத்துடன் குவாலியர் பிட்ச் ஸ்லோவாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என அவர் கூறியுள்ளார்.
எனவே முதல் போட்டியிலேயே வங்கதேசத்தை அதிரடியாக எதிர்கொண்டு இந்தியா வெல்லும் என்று சூரியகுமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சஞ்சு சாம்சன் இந்தத் தொடரில் அபிஷேக் ஷர்மாவுடன் துவக்க வீரராக களமிறங்கி முன்னோக்கிச் செல்வார். குவாலியரில் நாங்கள் 2 – 3 நாட்களாக பயிற்சி செய்து வருகிறோம்”
இந்தியா வெல்லும்:
“இங்கே மைதானம் ஸ்லோவாக இருப்பதாக தெரியவில்லை. டி20 கிரிக்கெட்டுக்கு உகந்த ஆடுகளமாகவே தெரிகிறது. எனவே இங்கே நல்ல போட்டியை எதிர்பார்க்கிறேன். பயிற்சி எடுக்கும் போது இங்குள்ள சூழ்நிலைகளைப் பற்றி தெரிந்து கொண்டோம். எனவே பிட்ச் எப்படி இருக்கும் என்ற ஐடியா கிடைத்துள்ளது. காற்றின் வேகம் மற்றும் பனியின் தாக்கம் போன்றவற்றைப் பற்றி மைதான பராமரிப்பாளர்களிடம் கேட்டறிந்தோம்”
இதையும் படிங்க: 93 ரன்ஸ்.. ஆசிய சாம்பியன் இலங்கையை ஊதித் தள்ளிய ஆஸி.. இந்தியாவுக்கு முன்பே நாக் அவுட்டானதா?
“நாங்கள் எங்களுடைய திட்டங்களை பின்பற்ற உள்ளோம். அனைவரும் தங்களுடைய வேலைகளில் அசத்தினால் நாங்கள் எதிர்பார்க்கும் முடிவு எங்களுக்கு பிரச்சனையாக இருக்காது” என்று கூறினார். அந்த வகையில் 2026 டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக இந்திய அணி சோதனைகளை நடத்த உள்ளது. அதில் அசத்தும் வீரர்களுக்கு உலகக் கோப்பையில் வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.