- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அந்த முடிவு தோனி, விராட், ரோஹித்திடம் கத்துக்கிட்டது தான்.. இந்திய அணியை வாழ்த்திய சூரியகுமார் பேட்டி

இலங்கைக்கு எதிராக நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரை 3 – 0 என்ற கணக்கில் இந்தியா வென்றது. குறிப்பாக ஜூலை 30ஆம் தேதி நடைபெற்ற 3வது போட்டியில் சூப்பர் ஓவரில் இந்தியா திரில் வெற்றி பெற்றது. அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா கில் 39, ரியான் பராக் 26, வாஷிங்டன் சுந்தர் 25 ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவரில் 137/9 ரன்கள் குவித்தது.

அதன் பின் பேட்டிங் செய்த இலங்கையும் 20 ஓவரில் 137/8 ரன்கள் எடுத்ததால் போட்டி சமனில் முடிந்தது. அதைத் தொடர்ந்து நடந்த சூப்பர் ஓவரில் வாஷிங்டன் சுந்தர் 2 ரன் மட்டுமே 2 விக்கெட்டுகள் எடுத்து இலங்கையை சுருட்டினார். இறுதியில் தீக்சனா வீசிய சூப்பர் ஓவரில் சூரியகுமார் பவுண்டரி அடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார்.

- Advertisement -

ஜாம்பவான்களிடம் இருந்து:
அந்த வகையில் புதிய கேப்டன் சூரியகுமார் யாதவ் தலைமையில் இந்தியா டி20 கிரிக்கெட்டில் தங்களது பயணத்தை வெற்றிகரமாக துவங்கியது. முன்னதாக அப்போட்டியில் கடைசி 2 ஓவரில் இலங்கைக்கு வெறும் 9 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டதால் கண்டிப்பாக இந்தியா தோற்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது ரிங்கு சிங்கிடம் 19வது ஓவரை கொடுத்த சூரியகுமார் 20வது ஓவரை தாமே வீசினர்.

அதில் அவர்கள் 8 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகள் எடுத்தது இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமானது. அந்த வகையில் வெற்றி கைநழுவிய நேரத்தில் சூரியகுமார் எப்படி அது போன்ற முடிவை எடுத்தார்? என்பது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக அமைந்தது. இந்நிலையில் அதெல்லாம் தோனி, விராட், ரோஹித் ஆகியோரிடம் கற்றுக் கொண்டதாக சூரியகுமார் தெரிவித்துள்ளார். இது பற்றி பிசிசிஐ வீடியோவில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“மற்ற கேப்டன்கள் தலைமையிலும் இது போல் எப்படி கடைசி பந்தில் வென்றுள்ளோம் என்பதை நான் பார்த்துள்ளேன். இங்கே பிட்ச் கொஞ்சம் காய்ந்திருக்கும் என்பதால் ரியான பராக், ரிங்கு போன்றவர்களிடம் பந்து வீசத் தயாராக இருக்குமாறு வலைப்பயிற்சியிலேயே கூறியுள்ளேன். இது போன்ற போட்டி ஒரு மாதத்திற்கு முன் முடிந்த 2024 டி20 உலகக் கோப்பை ஃபைனலை நினைவுபடுத்தியது. 30 பந்தில் 30 ரன் தேவை என்ற சூழ்நிலையில் ஓரிரு விக்கெட்டுகள் எடுத்தால் கூட வெல்லலாம் என்று நினைத்தேன்”

இதையும் படிங்க: வெல்டன் சூர்யா.. அந்த 2 விஷயத்துலயும் புத்திசாலித்தனமா கலக்கிட்டீங்க.. பாராட்டிய பாண்டியா

“நான் மும்பையில் உள்ளூர் கிரிக்கெட்டில் நிறைய விளையாடியுள்ளேன். அங்கே சர்வதேச அளவில் எப்படி நீங்கள் ரன்கள் அடிக்க முடியும் அல்லது நிறுத்த முடியும் என்பதை கற்றுக் கொள்வீர்கள். அது போன்ற அடிப்படைகளை கற்றுள்ள நான் ரோஹித் பாய், விராட் பாய், தோனி பாய் ஆகியோரின் கேப்டன்ஷிப்பில் நிறைய கற்றுள்ளேன்” என்று கூறினார். அத்துடன் அடுத்து நடைபெறும் ஒருநாள் தொடரை பார்ப்பேன் என்றும் தெரிவித்த சூரியகுமார் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

- Advertisement -