வெல்டன் சூர்யா.. அந்த 2 விஷயத்துலயும் புத்திசாலித்தனமா கலக்கிட்டீங்க.. பாராட்டிய பாண்டியா

Hardik Pandya
- Advertisement -

இலங்கைக்கு எதிராக ஜூலை 30ஆம் தேதி நடைபெற்ற 3வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா சூப்பர் ஓவரில் திரில் வெற்றி பெற்றது. பல்லக்கேல் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 137/8 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 25, ரியான் பராக் 26, சுப்மன் கில் 39 ரன்கள் எடுத்து கைகொடுத்தனர்.

அதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த இலங்கையும் 20 ஓவரில் 137 ரன்கள் எடுத்ததால் போட்டி சமனில் முடிந்தது. அதன் காரணமாக நடத்தப்பட்ட சூப்பர் ஓவரில் வாஷிங்டன் சுந்தர் 2 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்து இலங்கையை ஆல் அவுட்டாக்கினார். அதன் பின் தீக்சனா வீசிய சூப்பர் ஓவரில் சூரியகுமார் பவுண்டரி அடித்து இந்தியாவை எளிதாக வெற்றி பெற வைத்தார்.

- Advertisement -

பாண்டியா பாராட்டு:
அதனால் 3 – 0 (3) என்ற கணக்கில் புதிய கேப்டன் சூரியகுமார் யாதவ் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தலைமையில் இலங்கையை அதன் சொந்த மண்ணில் ஒய்ட்வாஷ் செய்து இந்தியா கோப்பையை வென்றது. முன்னதாக அப்போட்டியில் இலங்கைக்கு கடைசி 2 ஓவரில் 9 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட போது 19வது ஓவரை ரிங்கு சிங்கிடம் கொடுத்த கேப்டன் சூரியகுமார் கடைசி ஓவரை தாமே வீசியது வெற்றிக்கு முக்கிய காரணமானது.

அந்த வகையில் புத்திசாலித்தனமாக கேப்டன்ஷிப் செய்த சூரியகுமார் பவுலர்களை மிகச் சிறப்பாக ரொட்டேட் செய்ததாக ஹர்டிக் பாண்டியா பாராட்டியுள்ளார். இது பற்றி பிசிசிஐ வீடியோவில் அவர் பேசியது பின்வருமாறு. “முதலில் வெல்டன். சவாலான சூழ்நிலையில் முதலில் பேட்டிங் செய்த நமக்கு சவால் விடுக்கப்பட்டது. ஆரம்பத்திலேயே விக்கெட்டுகள் இழந்த போது கில், ரியான் பராக் சிறப்பாக பேட்டிங் செய்து பார்ட்னர்ஷிப் அமைத்தனர்”

- Advertisement -

“போட்டியின் சூழ்நிலையை விழிப்புணர்வுடன் அறிந்து அசத்திய அவர்கள் நமக்கு நல்ல ஸ்கோரை பெற்றுக் கொடுத்தனர். அதே போல 25 ரன்கள் அடித்த வாஷிங்டன் சுந்தர், 8 ரன்கள் அடித்த ரவி பிஷ்னோய் முக்கிய பங்காற்றினர். கம்பீர் பாய் சொன்னது போல சூரியகுமார் பவுலர்கள் மீது நம்பிக்கை வைத்து அவர்களை சுழற்சி முறையில் சரியாக பயன்படுத்தினார்”

இதையும் படிங்க: போராடுனா இதான் நடக்கும்.. ஆனா இதே நினைப்போட அந்த சீரிஸ்க்கு வராதீங்க.. இந்திய வீரர்களை எச்சரித்த கம்பீர்

“குறிப்பாக கடைசி 2 ஓவரில் சூரியகுமார் செயல்பட்ட விதம் புத்திசாலித்தனமானது. வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்ட அனைத்து பவுலர்களுமே முக்கிய பங்காற்றினர். இது போன்ற வெற்றிகள் தான் உங்களை முன்னோக்கி எடுத்துச் செல்லும். இந்த வெற்றி படிப்படியாக நம்மை முன்னோக்கி எடுத்துச் செல்லும். அடுத்ததாக ஒருநாள் தொடரில் விளையாட உள்ள வீரர்களும் இந்தியாவை வெற்றி பெற வையுங்கள்” என்று வாழ்த்தினார்.

Advertisement