சிஎஸ்கே அணியை வீழ்த்த.. அவரை வெச்சு இந்திய அணி டெம்ப்ளேட் யூஸ் பண்ணுவேன்.. சூரியகுமார் பேட்டி

Suryakumar Yadav
- Advertisement -

ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடர் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தாவில் கோலாகலமாக துவங்கியது. அந்தத் தொடரில் மார்ச் 23ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இருக்கும் சேப்பாக்கத்தில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன. தலா 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணிகளாக திகழும் சென்னையும் மும்பையும் மோதும் அந்தப் போட்டிக்கு ரசிகர்களிடம் எதிர்பார்த்து காணப்படுகிறது.

அந்தப் போட்டியில் தடை காரணமாக விளையாட முடியாத ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக சூரியகுமார் யாதவ் மும்பை கேப்டனாக செயல்பட உள்ளார். இந்திய டி20 அணியின் கேப்டனாக செயல்படும் அவர் கடந்த இங்கிலாந்து டி20 தொடரில் வெறும் 28 ரன்கள் மட்டுமே எடுத்து சுமாரான ஃபார்மில் இருக்கிறார். அது மும்பை அணிக்கு பின்னடைவாகவும் பார்க்கப்படுகிறது.

- Advertisement -

ஃபார்ம் பிரச்சனையில்லை:

இந்நிலையில் கவலைப்படும் அளவுக்கு தம்முடைய ஃபார்ம் மோசமாக இல்லை என்று சூரியகுமார் தெரிவித்துள்ளார். மேலும் இந்திய அணியில் சமீபத்திய தொடர்களில் தமக்கு பதிலாக திலக் வர்மாவை 3வது இடத்தில் சூரியகுமார் களமிறக்கினார். அதைப் பயன்படுத்திய திலக் தென்னாப்பிரிக்க மண்ணில் அடுத்தடுத்து சதங்களை அடித்து இந்தியாவின் வெற்றிகளின் பங்காற்றி நல்ல ஃபார்மில் இருக்கிறார்.

எனவே சிஎஸ்கே அணியை வீழ்த்துவதற்கு அதே பேட்டிங் வரிசையை பயன்படுத்த உள்ளதாக சூரியகுமார் அறிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “எனது ஐபிஎல் ஃபார்ம் நன்றாக இருக்கிறது. டாப் ஆர்டரில் ஆரம்பத்திலேயே தாக்கத்தை ஏற்படுத்துவது நன்றாக இருக்கும். அதை திலக் வர்மா செய்வதை நான் பார்த்துள்ளேன்”

- Advertisement -

இந்திய அணி டெம்ப்ளேட்:

“கடினமாக உழைக்கும் அவர் இந்தியாவுக்காக 3வது இடத்தில் விளையாடுவது நன்றாக இருக்கும் என்று நான் கருதினேன். 4வது இடத்தில் விளையாடும் பொறுப்பை நான் எடுத்துக்கொள்கிறேன். ஏனெனில் எனக்கு எந்த இடத்தில் விளையாடினாலும் பிரச்சினை கிடையாது. வாய்ப்புகள் இருக்கும் போது அதில் வழக்கம் போல விளையாடி தாக்கத்தை ஏற்படுத்த நான் முயற்சிக்க உள்ளேன்”

இதையும் படிங்க: 107/1 டூ 174/8.. கொல்கத்தாவை மடக்கிய ஆர்சிபி.. ஹிட் விக்கெட்டாகியும் அவுட் வழங்காத அம்பயர்.. காரணம் என்ன?

“எனவே இந்த ஐபிஎல் தொடரில் எங்களுடைய பேட்டிங் வரிசையில் வளைவுத்தன்மை இருப்பதை நீங்கள் பார்ப்பீர்கள். தேவைப்பட்டால் நான் ஐந்தாவது இடத்திலும் மூன்றாவது இடத்திலும் விளையாடுவேன். திலக் 5வது விளையாடுவார். அது போன்ற வளைவுத்தன்மை எங்களுடைய அணியில் இருக்கிறது. ஃபார்ம் என்பது நீங்கள் கடினமாக உழைக்கும் போது எந்த நேரத்திலும் வரும். உண்மையில் நான் செயல்முறைகளை பின்பற்றக்கூடிய நபர். வலைப்பயிற்சியில் கடினமாக உழைக்கும் எனக்கு களத்தில் ரன்கள் வரும்” என்று கூறினார்.

Advertisement