- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சூரியகுமார் யாதவின் கேப்டன் பதவிக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து.. புதிய டி20 கேப்டன் யார்? – விவரம் இதோ

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய டி20 அணியானது 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை வென்று சாதனை நிகழ்த்தியது. அந்த தொடரை வென்ற கையோடு ரோகித் சர்மா டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவே புதிய கேப்டனாக சூரியகுமார் யாதவ் அறிவிக்கப்பட்டார். அவரது தலைமையின் கீழ் எந்த ஒரு டி20 தொடரையும் இழக்காமல் வெற்றிகரமாக நடைபோட்ட சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 அணி 2026 டி20 உலக கோப்பையும் கைப்பற்றி தொடர்ச்சியாக இரண்டு உலக கோப்பைகளை வென்று அசத்தியிருந்தது.

பறிபோக காத்திருக்கும் சூரியகுமார் யாதவின் கேப்டன் பதவி :

அதனை தொடர்ந்து தற்போது இந்திய வீரர்கள் அனைவரும் 2026 ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடி வரும் வேளையில் இந்த ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு நடைபெற இருக்கும் அயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி தேர்வு செய்யப்படலாம் என்று தெரிகிறது.

- Advertisement -

இப்படி ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு தேர்வு செய்யப்பட இருக்கும் டி20 இந்திய அணியில் பல மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் கடந்த ஓராண்டாகவே கேப்டன் சூர்யகுமார் யாதவின் பேட்டிங் பார்ம் மோசமாக இருந்து வருகிறது. அதோடு ஒரு சில மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் செயல்பாடும் சற்று சுமாராக இருந்து வருவதால் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று தெரிகிறது.

அந்த வகையில் கேப்டன் சூர்யகுமார் யாதவின் பதவியும் பறிபோக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் அவரது பேட்டிங் பார்ம், வயது மற்றும் உடற்தகுதி ஆகியவற்றை வைத்து அவர் பேட்ஸ்மேனாக தேர்வு செய்யப்பட்டாலும் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இப்படி ஒருவேளை சூர்யகுமார் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டால் அவருக்கு பதிலாக டி20 அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : விராட் கோலி கொடுத்த அட்வைஸ் தான் நான் அவரையே வீழ்த்த காரணம் – பிரின்ஸ் யாதவ் பேட்டி

ஏனெனில் 2024 ஐ.பி.எல் தொடரை கொல்கத்தா அணியின் கேப்டனாக வென்று கொடுத்த ஷ்ரேயாஸ் ஐயர் 2025 ஐ.பி.எல் தொடரில் பஞ்சாப் அணியை இறுதிப்போட்டி வரை அழைத்து சென்றார். அதுமட்டுமின்றி நடப்பபு 2026 ஐ.பி.எல் தொடரிலும் அவரது செயல்பாடு சிறப்பாக இருப்பதால் மீண்டும் டி20 அணிக்கு கம்பேக் கொடுப்பதோடு மட்டுமின்றி கேப்டன் பதவியும் பெறலாம் என்று கூறப்படுகிறது.

- Advertisement -