இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டியானது நாளை மார்ச் 8-ஆம் தேதி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்காக தற்போது இரு அணி வீரர்களும் அகமதாபாத் நகரில் தீவிர பயிற்சியினை மேற்கொண்டு தயாராகி வருகின்றனர்.
ரோஹித் சர்மா பாணியை பின்பற்றுகிறேன் : சூரியகுமார் யாதவ்
இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள இந்த இறுதி போட்டிக்கு முன்னதாக பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது தனது கேப்டன்ஷிப் பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் கூறுகையில் :
ரோகித் சர்மா பாணியில் தான் கேப்டன் செய்து வருவதாக வெளிப்படையாக பதிலளித்து இருந்தார். அந்த வகையில் அவர் கூறியதாவது : ரோகித் சர்மாவை ஒரு கேப்டனாக மட்டுமல்லாமல், மூத்த சகோதரராகவும் எனது வழிகாட்டியாகவும் பார்க்கிறேன். களத்திலோ அல்லது தனிப்பட்ட முறையிலோ எனக்கு ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் நான் முதலில் அழைக்கும் நபர் ரோகித் சர்மா தான்.
எந்த நேரத்திலும் அவர் கொடுக்கும் அறிவுரைகள் என்னுடைய முடிவுகளுக்கு சாதகமாக இருந்துள்ளது. நான் அவருடன் இணைந்து நிறையவே கிரிக்கெட் விளையாடி உள்ளேன். அவர் எப்படி இந்திய அணியை வழிநடத்தி சென்றார் என்பதை அருகில் இருந்தும் பார்த்திருக்கிறேன்.
இதையும் படிங்க : வெறும் 4 போட்டியிலேயே ரோஹித் சர்மாவின் சாதனையை காலி செய்த சஞ்சு சாம்சன் – விவரம் இதோ
எனவே அவரிடம் இருந்து கற்றுக் கொண்ட கேப்டன்சியை நான் பின்பற்றி வருவதால் இந்திய அணியை வெற்றிகரமாக வழிநடத்த முடிகிறது. இந்த உலக கோப்பை தொடரை நிச்சயம் வென்று நமது நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன் என சூரியகுமார் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது.



