வெறும் 4 போட்டியிலேயே ரோஹித் சர்மாவின் சாதனையை காலி செய்த சஞ்சு சாம்சன் – விவரம் இதோ

Samson and Rohit
- Advertisement -

நடைபெற்று வரும் நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆரம்ப கட்டப் போட்டிகளில் மோசமான பேட்டிங் ஃபார்ம் காரணமாக துவக்க வீரரான சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் இடையில் அபிஷேக் ஷர்மாவிற்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு மற்றும் மோசமான பேட்டிங் ஃபார்ம் ஆகியவற்றின் காரணமாக சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்படி தனக்கு கிடைத்த வாய்ப்பில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு சூப்பர் 8 சுற்றில் மீண்டும் தொடர் வாய்ப்புகள் கிடைக்க தொடங்கின.

ரோஹித் சர்மாவின் வாய்ப்பை முறியடித்த சஞ்சு சாம்சன் :

அந்த வகையில் தனக்கு கிடைத்த வாய்ப்பை அற்புதமாக பயன்படுத்தி கொண்ட அவர் ஜிம்பாப்வே மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்று கொடுத்தார். பின்னர் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற அரையிறுதி போட்டியிலும் பிரமாதமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

- Advertisement -

இதன் காரணமாக மீண்டும் சஞ்சு சாம்சன் டி20 அணியின் முதன்மை வீரராக நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் இறுதிப்போட்டியில் பங்கேற்று விளையாட இருக்கிறார். இந்நிலையில் இந்த டி20 உலக கோப்பை தொடரில் 4 போட்டிகளில் மட்டுமே விளையாடி இருந்தாலும் முன்னாள் கேப்டனான ரோகித் சர்மாவின் மாபெரும் சாதனை ஒன்றினை அவர் தகர்த்துள்ளார். அந்த வகையில் சஞ்சு சாம்சன் நிகழ்த்திய சாதனை யாதெனில் :

டி20 உலக கோப்பை தொடர் ஒன்றில் அதிக சிக்சர்களை விளாசிய இந்திய வீரராக ரோகித் சர்மா முதலிடத்தில் இருந்தார். கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில் ரோஹித் சர்மா 15 சிக்ஸர்களை விளாசியதே சாதனையாக இருந்தது.

- Advertisement -

இதையும் படிங்க : அபிஷேக் சர்மா கிட்ட இதை மட்டும் சொல்லுங்க.. அவர் கண்டிப்பா அசத்துவாரு – ரவி சாஸ்திரி நம்பிக்கை

இந்நிலையில் இந்த 2026 டி20 உலக கோப்பை தொடரில் வெறும் 4 ஆட்டங்களில் மட்டுமே விளையாடியுள்ள சஞ்சு சாம்சன் 16 சிக்ஸர்களை விளாசி ஒரு டி20 தொடரில் அதிக சிக்ஸர்களை விளாசிய இந்திய வீரராக சாதனையை நிகழ்த்தியுள்ளார். ரோகித் சர்மாவிற்கு அடுத்து ஷிவம் துபே 15 சிக்ஸர்களுடனும், இஷான் கிஷன் 14 சிக்ஸர்களுடனும், ஹார்டிக் பாண்டியா 14 சிக்ஸர்களுடனும் அடுத்தடுத்த இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement