- Advertisement -
ஆசிய கோப்பை

இப்படி ஒரு திறமையான குரூப் எனக்கு கிடைச்சதுக்கு நான் ரொம்ப லக்கியா பீல் பண்றேன் – சூரியகுமார் யாதவ் பேட்டி

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது 2025 ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடுவதற்காக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தியாவிலிருந்து நேரடியாக துபாய் சென்ற இந்திய வீரர்கள் தற்போது துபாயில் உள்ள ஐசிசி கிரிக்கெட் அகாடமி மைதானத்தில் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர். ஏற்கனவே கடந்த ஒரு மாதமாக ஓய்வில் இருந்த வீரர்கள் தற்போது முழுவீச்சில் பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர்.

இப்படி ஒரு அணி கிடைத்ததில் மகிழ்ச்சி : சூர்யகுமார் யாதவ்

மொத்தம் எட்டு நாடுகள் பங்கேற்று விளையாட இருக்கும் இந்த ஆசிய கோப்பை தொடரில் இடம் பெற்றுள்ள இந்திய அணியானது எதிர்வரும் செப்டம்பர் 10-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிராக துபாய் மைதானத்தில் நடைபெற இருக்கும் முதலாவது லீக் போட்டியில் விளையாட இருக்கிறது. இதன் காரணமாக தற்போது முழுவீச்சில் இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்த ஆசிய கோப்பை தொடருக்காக தங்களது அணியின் வீரர்கள் பயிற்சியில் தயாராகி வரும் விதம் குறித்து இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தற்போது பிசிசிஐ இணையதளத்திற்கு பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அந்த வகையில் நேற்றைய பயிற்சிக்கு பின் பேசிய சூரியகுமார் யாதவ் கூறியதாவது : உண்மையிலேயே இப்படி ஒரு திறமையான அணி கிடைத்ததில் நான் லக்கியாக நினைக்கிறேன்.

இந்திய வீரர்கள் அனைவரும் நம்ப முடியாத அளவுக்கு திறமைகளை வைத்துள்ளனர். இதுபோன்ற அணி என்னிடம் இருக்கும்போது நான் எப்பொழுதும் சிரித்துக் கொண்டே தான் இருப்பேன். என்னுடைய அணியின் வீரர்களை நினைத்தால் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

- Advertisement -

ஏனெனில் மைதானத்தில் வந்து வீரர்கள் பயிற்சி செய்யும் விதத்தை பார்க்கையில் அவர்கள் தங்களது முழு உழைப்பையும் கொடுத்து பயிற்சி பெறுவதை பார்க்க பெருமையாக இருக்கிறது. ஒரு அணியின் கேப்டனாக இதபோன்ற வீரர்கள் கிடைப்பதை தவிர வேறு எதுவும் தேவை கிடையாது. பயிற்சியில் நாங்கள் தற்போது மகிழ்ச்சியுடன் செயல்பட்டு வருகிறோம்.

இதையும் படிங்க : ஷிகார் தவானின் மாபெரும் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் அபிஷேக் ஷர்மா – விவரம் இதோ

எதிர்வரும் இந்த ஆசிய கோப்பை தொடரில் நமது அணி சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தும் என சூரியகுமார் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் 2026 டி20 உலக கோப்பை தொடரை கருத்தில் கொண்டு இம்முறை 20 போட்டிகளாக ஆசிய கோப்பை தொடர் நடைபெறவுள்ள வேளையில் இந்த தொடரில் இந்திய அணி நடப்பு சாம்பியனாக பங்கேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -