இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாட நினைத்த சூரியகுமார் யாதாவிற்கு ஏற்பட்ட சோகம் – நடந்தது என்ன?

Surya
- Advertisement -

அண்மையில் இந்திய கிரிக்கெட் அணியின் டி20 போட்டிகளுக்கான கேப்டனாக சூரியகுமார் யாதவ் அறிவிக்கப்பட்டார். அவரது தலைமையில் இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய இந்திய அணியானது மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. அந்த தொடரில் பேட்ஸ்மேனாக மட்டுமின்றி கேப்டனாகவும் சூரியகுமார் யாதவ் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி அசத்தியிருந்தார்.

சூரியகுமார் யாதவுக்கு ஏற்பட்ட சோகம் :

அதோடு தனிப்பட்ட வகையில் பயிற்சியாளரான கம்பீருக்கு சூரியகுமார் யாதவை மிகவும் பிடிக்கும் என்பதனால் அவரை அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் பயன்படுத்த கம்பீர் திட்டமிட்டு வருகிறார்.

- Advertisement -

அந்த வகையில் டி20 ஸ்பெசலிஸ்ட் பேட்ஸ்மேனாக பார்க்கப்படும் சூரியகுமார் யாதவ் ஏற்கனவே இந்திய அணிக்காக ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இடம் பிடித்து விளையாடி இருந்தாலும் அவருக்கு டி20 கிரிக்கெட்டை தவிர்த்து மற்ற வகையான கிரிக்கெட்டில் தொடர்ச்சியான வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை.

அப்படி கிடைத்த ஒருசில வாய்ப்புகளிலும் பொறுமை இல்லை என்றும் சற்று சொதப்பலான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தியதாலும் அவருக்கு தொடர்ச்சியாக ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கம்பீரின் வேண்டுகோளின் படி தற்போது மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இடம் பிடிப்பதற்காக உள்ளூர் தொடர்களில் சூரியகுமார் யாதவ் விளையாடி வருகிறார்.

- Advertisement -

அந்த வகையில் பஜ்ஜி பாபு தொடரில் விளையாடி வரும் அவர் துலீப் டிராபி தொடருக்கான இந்திய அணியிலும் கேப்டனாக இடம் பிடித்துள்ளார். இந்த இரண்டு தொடரிலும் அவர் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் மீண்டும் டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவார் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் புஜ்ஜி பாபு தொடரில் தமிழக அணிக்கெதிரான போட்டியின் போது அவருக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க : 8 போர்ஸ் 19 சிக்ஸ்.. 308 ரன்ஸ்.. ஒரே ஓவரில் யுவராஜ் போல 6 சிக்ஸ்.. டெல்லியில் ருத்ரதாண்டவம் ஆடிய படோனி

இதன் காரணமாக வலியில் துடித்த அவர் தற்போது காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். எதிர்வரும் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் இந்த காயம் அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை காயம் விரைவில் குணமடைந்து அவர் துலீப் டிராபி தொடரில் பேட்ஸ்மேனாக அசத்தும் பட்சத்தில் டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணிக்கு திரும்ப வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement