
சுப்மன் கில் தலைமையிலான இந்திய ஒருநாள் அணியானது நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஒன்றுக்கு இரண்டு (1-2) என்ற கணக்கில் இழந்தது. அதனை தொடர்ந்து சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 கிரிக்கெட் அணியானது அடுத்ததாக நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட காத்திருக்கிறது.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியானது ஜனவரி 21-ஆம் தேதியான நாளை நாக்பூர் நகரில் துவங்கி நடைபெற இருக்கிறது. அதன் காரணமாக இரு அணிகளைச் சேர்ந்த வீரர்களும் தற்போது அங்கு முகாமிட்டு தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர்.
எதிர்வரும் 2026 டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னதாக நடைபெற இருக்கும் கடைசி தொடர் என்பதால் இந்த தொடரானது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் விளையாடயிருக்கும் இந்திய டி20 அணியின் கேப்டனான சூர்யகுமார் யாதவ் சர்வதேச டி20 போட்டிகளில் நான்காவது இந்திய வீரராக மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்த காத்திருக்கிறார்.
அதுகுறித்த தகவல் வெளியாகி பலரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த வகையில் சூரியகுமார் யாதவ் நிகழ்த்தப் போகும் சாதனை யாதெனில் : கடந்த 2021-ஆம் ஆண்டு சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக அறிமுகமான அவர் இதுவரை 99 போட்டிகளில் விளையாடி 4 சதம் உட்பட 2788 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார்.
இந்நிலையில் நாளைய நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியானது சூரியகுமார் யாதவுக்கு 100 ஆவது சர்வதேச டி20 போட்டியாக மாறியுள்ளது. ஏற்கனவே இந்திய அணிக்காக சர்வதேச டி20 போட்டிகளில் 100 போட்டிகளுக்கு மேல் விளையாடிய வீரர்களாக ரோகித் சர்மா (159 போட்டிகள்), விராட் கோலி (125 போட்டிகள்), ஹார்டிக் பாண்டியா (124 போட்டிகள்) ஆகியோர் முதல் மூன்று இடங்களில் இருக்கின்றனர்.
இதையும் படிங்க : அபிஷேக் சர்மா டி20 போட்டிகளில் நம்பர் 1 பேட்ஸ்மேனாக இருக்க காரணம் இதுதான் – சுரேஷ் ரெய்னா கருத்து
இவ்வேளையில் அவர்களுக்கு அடுத்து நான்காவது இந்திய வீரராக சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணி சார்பாக 100 போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை சூரியகுமார் யாதவ் நிகழ்த்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.