அபிஷேக் சர்மா டி20 போட்டிகளில் நம்பர் 1 பேட்ஸ்மேனாக இருக்க காரணம் இதுதான் – சுரேஷ் ரெய்னா கருத்து

Raina and Abhishek
- Advertisement -

ரோகித் சர்மா சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு இந்திய டி20 அணியின் துவக்க ஆட்டக்காரராக அபிஷேக் ஷர்மா நிரந்தர இடம் பிடித்து விளையாடி வருகிறார். ஐபிஎல் போட்டிகளில் தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் பலரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்த அவருக்கு சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது.

அபிஷேக் சர்மா டி20 போட்டிகளில் அசத்த இதுவே காரணம் : சுரேஷ் ரெய்னா

அப்படி 2024-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் அறிமுகமான அபிஷேக் ஷர்மா இதுவரை 33 போட்டிகளில் விளையாடி 2 சதம் மற்றும் 6 அரைசதம் என 188 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 1115 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். அதுமட்டுமின்றி ஐசிசி சர்வதேச டி20 போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்களின் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

- Advertisement -

ஏற்கனவே டி20 போட்டிகளுக்கான நிரந்தர துவக்க வீரருக்கான இடத்தை பிடித்து விட்ட அவர் 2026 டி20 உலக கோப்பை தொடரிலும் பங்கேற்று விளையாட காத்திருக்கிறார். இந்த டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணியாக அவரே திகழ்வார் என்று பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் 25 வயதான அபிஷேக் சர்மாவை பாராட்டிப் பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா அவர் ஏன் டி20 போட்டிகளில் அபாயகரமான வீரராக இருக்கிறார்? என்பது குறித்த சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் சுரேஷ் ரெய்னா கூறியதாவது :

- Advertisement -

அபிஷேக் சர்மாவின் பேட் ஸ்விங் மற்றவர்களை காட்டிலும் மிகச் சிறப்பாக இருக்கிறது. அதனாலேயே அவர் எளிதாக சிக்ஸர்களை விளாசுகிறார். அதிலும் குறிப்பாக ஸ்பின்னர்களுக்கு எதிராக நின்ற இடத்தில் இருந்து சிக்ஸ் அடிக்கும் பவர் அவரிடம் இருக்கிறது. அதேபோன்று ஆப் சைடில் அவரால் எளிதாக பந்துகளை தூக்கி அடிக்க முடிகிறது.

இதையும் படிங்க : நியூசி அணிக்கெதிரான முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ

அவருடைய கால் நகர்வுகள் மற்றும் திடமான பேட் ஸ்விங் ஆகிய இரண்டும் சரியாக இருப்பதினால் அவரால் பெரிய சிக்சர்களை விளாச முடிகிறது. முதல் ஓவரில் இருந்தே பந்தை அடித்து விளையாட விரும்பும் அவர் சரியான பந்துகளை சரியான திசைகளை நோக்கி அடிப்பதனாலே அபாயகரமான வீரராக இருக்கிறார் என்றும் சுரேஷ் ரெய்னா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement