
அண்மையில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரோடு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டி20 வடிவ கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். அதன் காரணமாக அதற்கடுத்து புதிய டி20 கேப்டனை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ-க்கு ஏற்பட்டது.
ரோகித் சர்மாவுக்கு அடுத்து டி20 கிரிக்கெட்க்கு ஹார்டிக் பாண்டியா தான் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் பாண்டியாவின் தனிப்பட்ட சூழல் காரணமாக தற்போது புதிய கேப்டனாக சூரியகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் 2026-ஆம் ஆண்டு டி20 உலககோப்பை வரை அவரே கேப்டனாக தொடர்வார் என்றும் முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்திய அணியின் கேப்டனாக சூரியகுமார் யாதவ் தேர்வு செய்தது தற்காலிகமான முடிவுதான். அவர் ஒரு தற்காலிக கேப்டன் தான் இயல்பான கேப்டன் தேர்வு அவர் கிடையாது என்று முன்னாள் நியூசிலாந்து வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் விமர்சித்து இருந்தார்.
அவரது இந்த கருத்தை ஏற்காத ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சித்து தங்களது பதிலடி கொடுத்து வந்தனர். இந்த விவகாரம் ஒரு புறம் புகைந்து கொண்டிருக்கும் வேளையில் தான் தற்காலிக கேப்டன் அல்ல சிறப்பான கேப்டன் தான் என்பதை சூரியகுமார் யாதவ் தனது செயலின் மூலம் நிரூபித்துள்ளார்.
ஏனெனில் ஏற்கனவே இந்திய அணியின் கேப்டனாக இருந்துள்ள அவர் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றி கொடுத்தார். தற்போது நடைபெற்று வரும் இலங்கை அணிக்கு எதிரான தொடரிலும் முதல் இரண்டு போட்டிகளை வெற்றி பெற்று தற்போதே இந்த தொடரை வென்று கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க : விராட் கோலியின் இடத்தை ருதுராஜ் – சுப்மன் கில் நிரப்ப.. கம்பீர் இதை செய்யனும்.. உத்தப்பா அட்வைஸ்
இதன்மூலம் மூன்று டி20 தொடர்களை அவர் இந்திய அணிக்காக வென்று கொடுத்திருக்கிறார். இப்படி தனது செயலின் மூலம் ஸ்காட் ஸ்டைரிஸ்-க்கு சூரியகுமார் யாதவ் பதிலடி கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.