விராட் கோலியின் இடத்தை ருதுராஜ் – சுப்மன் கில் நிரப்ப.. கம்பீர் இதை செய்யனும்.. உத்தப்பா அட்வைஸ்

Robin Uthappa
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி வென்றது. அந்த வெற்றியுடன் ஜாம்பவான் வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் ஓய்வு பெற்றனர். கடந்த 10 வருடங்களாக இந்திய அணியின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றி அவர்கள் 35 வயதை கடந்துள்ளதால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு விடை பெற்றுள்ளனர்.

இதைத் தொடர்ந்து டி20 அணியில் அவர்களுடைய இடத்தை நிரப்பப்போவது யார் என்று எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்நிலையில் 3 வகையான கிரிக்கெட்டில் அபாரமாக விளையாடும் விராட் கோலியின் இடத்தை வருங்காலங்கில் நிரப்பும் திறமையை ருதுராஜ் கெய்க்வாட் – சுப்மன் கில் கொண்டிருப்பதாக ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார். எனவே அந்த இருவருக்கும் இந்திய அணி சமமான வாய்ப்பு வழங்க வேண்டும் என்று உத்தப்பா தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சமமான வாய்ப்பு:
குறிப்பாக தற்போது நடைபெற்று வரும் இலங்கை தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் தேர்வு செய்யப்படவில்லை. மறுபுறம் சுப்மன் கில்லை புதிய பயிற்சியாளர் கௌதம் கம்பீர் துணை கேப்டனாக தேர்ந்தெடுத்துள்ளார். எனவே கம்பீர் அந்த இருவருக்கும் நியாயமான வாய்ப்பு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கும் உத்தப்பா இது பற்றி சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு.

“விராட் கோலியின் இடத்தில் ஏன் அந்த இருவராலும் நிரப்ப முடியாது? ஏனெனில் இருவருமே நல்ல வீரர்கள். டி20 கிரிக்கெட்டில் அவர்கள் எந்தளவுக்கு தரமானவர்கள் என்பதை அவர்களின் புள்ளிவிவரங்கள் பேசுகின்றன. இருப்பினும் தொடர்ச்சியாக செயல்படக்கூடியவர் என்ற அடிப்படையில் பார்க்கும் போது ருதுராஜ் புள்ளிவிவரங்கள் கொஞ்சம் நன்றாக இருக்கிறது”

- Advertisement -

“ஆனால் சுப்மன் கில் பவர் மற்றும் டச் ஆகியவற்றை பெறுவதற்கான பன்முகத் தன்மையை கொண்டுள்ளார். எனவே அந்த இருவரில் ஒருவரை தேர்ந்தெடுப்பது மிகவும் கடினம். எனவே அவர்கள் இருவரையும் இந்திய அணி தேர்ந்தெடுத்து விளையாட வேண்டும் என்று நான் கேட்பேன். ஏனெனில் அந்த இருவருமே 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாடக்கூடிய வீரர்கள்” என்று கூறினார்.

இதையும் படிங்க: அந்த 3 பேரும் சப்போர்ட் பன்றாங்க.. என்னாச்சு தெரியல இலங்கை வெற்றியை இந்தியாவுக்கு கொடுத்துட்டாங்க.. ரவி பிஸ்னோய்

முன்னதாக எம்எஸ் தோனியின் நம்பிக்கையை ருதுராஜ் சிஎஸ்கே அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அவருடைய தலைமையில் ஏற்கனவே இந்தியா 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றது. ஆனால் அவருக்கு இலங்கை தொடரில் பெஞ்சில் அமரும் வாய்ப்பு கூட கிடைக்காத நிலையில் சுப்மன் கில் துணை கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement