அந்த 3 பேரும் சப்போர்ட் பன்றாங்க.. என்னாச்சு தெரியல இலங்கை வெற்றியை இந்தியாவுக்கு கொடுத்துட்டாங்க.. ரவி பிஸ்னோய்

Ravi Bishnoi 2
- Advertisement -

இலங்கைக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் 43 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 2வது போட்டியிலும் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதனால் 2 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே அத்தொடரின் கோப்பையை இந்தியா கைப்பற்றியுள்ளது.

அத்துடன் புதிய கேப்டன் சூரியகுமார் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தலைமையில் இந்தியா தங்களுடைய பயணத்தை வெற்றிகரமாக துவங்கியுள்ளது. மறுபுறம் இதே தொடரில் ஷரித் அசலங்கா மற்றும் ஜாம்பவான் சனாத் ஜெயசூர்யா ஆகியோர் இலங்கையின் புதிய கேப்டன் மற்றும் பயிற்சியாளராக பொறுப்பேற்றனர். ஆனால் அவர்களது தலைமையிலும் முன்னேற்றத்தை காணாத இலங்கை சொந்த மண்ணில் மீண்டும் தொற்றுள்ளது.

- Advertisement -

என்னாச்சு தெரியல:
குறிப்பாக முதல் போட்டியில் 140/1 என்ற நல்ல துவக்கத்தை பெற்ற இலங்கை அதன் பின் 30 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து தோற்றது. அதே போல 2வது போட்டியிலும் கடைசி 5 ஓவரில் 31 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தத இலங்கை தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் கேப்டன் சூரியகுமார், பயிற்சியாளர் கம்பீர், துணை கேப்டன் சுப்மன் கில் ஆகியோர் தமக்கு ஆதரவு கொடுப்பதாக ரவி பிஸ்னோய் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சுழலை நன்றாக விளையாடக்கூடிய இலங்கை அணியினர் முக்கிய நேரத்தில் திடீரென சொதப்பி வெற்றியை தாரை வார்த்ததன் காரணம் தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். 2வது போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற ரவி பிஸ்னோய் இது பற்றி பேசியது பின்வருமாறு. “கேப்டனாக சிறப்பாக செயல்படும் சூரியகுமார் தலைமையில் ஏற்கனவே நான் ஆஸ்திரேலிய தொடரில் விளையாடியுள்ளேன்”

- Advertisement -

“சுப்மன் கில்லும் ஜிம்பாப்வே தொடரில் கேப்டனாக நன்றாக செயல்பட்டார். அவர்கள் எப்போதும் எனக்கு ஆதரவு கொடுக்கின்றனர். கேப்டனின் ஆதரவை விட ஒரு பவுலர் வேறு எதையும் கேட்க மாட்டார். சூரியகுமார், சுப்மன் கில் இருவருமே எனக்கு ஆதரவு கொடுத்தனர். லக்னோ அணியில் 2 வருடங்களாக கௌதம் கம்பீரும் நானும் நல்ல உறவைக் கொண்டிருந்தோம். அவர் என்னிடம் எதையும் மாற்றுமாறு சொல்லவில்லை”

இதையும் படிங்க: உங்களால் பேலன்ஸ் பாதிக்குது.. இதை செஞ்சா மட்டுமே பாண்டியா கம்பேக் கொடுக்க முடியும்.. சாஸ்திரி அட்வைஸ்

“தற்போது செய்வதை தொடருமாறு அவர் சொன்னார். ஆரம்பத்தில் போலவே இப்போதும் அவருடைய ஆலோசனைகள் எனக்கு உதவுகிறது. இலங்கை அணியினர் சுழலை நன்றாக விளையாடுகின்றனர். ஆனால் அவர்களுக்கு என்ன ஆயிற்று என்று எனக்குத் தெரியவில்லை. சுழலை நன்றாக விளையாடக்கூடிய அணியாக அறியப்படும் இலங்கை மிடில் ஓவர்களில் சரிந்தனர். அவர்களிடம் ஏதோ தவறானதாக நினைக்கிறேன்” என்று கூறினார்.

Advertisement