
டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிராக நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 63-வது போட்டியில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது 59 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை வீழ்த்தி நான்காவது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி பெற்ற பிரமாதமான வெற்றி பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெறுவதற்கு மிக முக்கியமான காரணமாக அந்த அணியின் நட்சத்திர அதிரடி ஆட்டக்காரரான சூரியகுமார் யாதவ் திகழ்ந்தார். ஏனெனில் இந்த போட்டியில் 43 பந்துகளை சந்தித்த அவர் 7 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் என 73 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அவரது இந்த சிறப்பான ஆட்டம் காரணமாகவே அந்த அணி 180 ரன்களை குவித்தது. பின்னர் 181 ரன்களை துரத்திய டெல்லி அணி 121 ரன்களை மட்டுமே குவிக்க 59 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் தனது மிகச் சிறப்பான பேட்டிங்கின் மூலம் ஆட்டத்தை மாற்றிய சூர்யகுமார் யாதவுக்கு இந்த போட்டிக்கான ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில் இந்த ஆட்டத்தில் 43 பந்துகளை சந்தித்து 7 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்களுடன் 73 ரன்கள் அடித்த சூரியகுமார் யாதவ் டி20 கிரிக்கெட்டில் தெம்பா பவுமாவின் சாதனை ஒன்றினை சமன் செய்து அசத்தியுள்ளார். அது குறித்த தகவல் தற்போது வெளியாகிய அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த வகையில் ஏற்கனவே டி20 போட்டிகளில் தென்னாப்பிரிக்க வீரரான தெம்பா பவுமா தொடர்ச்சியாக 13 ஆட்டங்களில் 25+ ரன்களை குவித்திருந்தார். அந்த சாதனையை தற்போது இந்த ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் சூரியகுமார் யாதவ் சமன் செய்துள்ளார். அதாவது இந்த ஐ.பி.எல் தொடரில் தொடர்ந்து ரன்களை குவித்து அசத்தி வரும் அவரும் தொடர்ந்து 13 போட்டிகளில் 25+ ரன்களை குவித்து அசத்தியுள்ளார்.
இதையும் படிங்க : இந்த ஆண்டு டெல்லி கேபிட்டல்ஸ் அணி பிளே ஆப் வாய்ப்பை தவறவிட இதுதான் காரணம் – கோச் ஹேமங் பதானி பேட்டி
ஐபிஎல் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள வேளையில் முரட்டு தனமான ஹிட் பார்ம்க்கு திரும்பியுள்ள சூரியகுமார் யாதவ் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெரும் பலத்தை சேர்த்துள்ளார். இந்த தொடரை தோல்வியுடன் ஆரம்பித்த மும்பை அணி தற்போது வெகு சிறப்பாக விளையாடி வரும் வேளையில் ஆறாவது கோப்பையை வெல்லவும் அந்த அணிக்கு வாய்ப்புள்ளதாக பலரும் கூறி வருகின்றனர்.