இந்திய வீரராக இதுவரை யாருமே செய்யாத விசித்திரமான சாதனையை நிகழ்த்திய – சூரியகுமார் யாதவ்

Ravi-Shastri-and-SKY
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 9-ஆம் தேதி நாக்பூர் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 177 ரங்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

KS Bharat

- Advertisement -

இந்திய அணி சார்பாக சுழற்பந்து வீச்சாளர்கள் ஜடேஜா ஐந்து விக்கெட்டுகளையும், அஸ்வின் மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். அதனை தொடர்ந்து தற்போது தங்களது முதலில் இன்னிங்க்ஸை விளையாடி வரும் இந்திய அணியானது இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 321 ரன்கள் குவித்து 144 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியில் அறிமுக வீரராக களம் இறங்கிய சூரியகுமார் யாதவ் இந்திய அணி சார்பாக வித்தியாசமான சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார். அதன்படி நாக்பூர் மைதானத்தில் இந்திய அணியின் 304-ஆவது டெஸ்ட் வீரராக சூரியகுமார் யாதவும், 305 ஆவது டெஸ்ட் வீரராக கே.எஸ் பாரத்தும் அறிமுக வீரர்களாக களமிறங்கினார்கள்.

Suryakumar Yadav

இதில் ஆந்திராவைச் சேர்ந்த கே.எஸ் பரத்திற்கு இதுதான் முதல் சர்வதேச போட்டி. ஆனால் சூரியகுமார் யாதவ் ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். இந்நிலையில் சூரியகுமார் யாதவ் படைத்த அந்த வித்தியாசமான சாதனை யாதெனில் :

- Advertisement -

கடந்த 2021-ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக அவர் டி20 கிரிக்கெட்டில் அறிமுகமானபோது சூரியகுமார் யாதவுக்கு வயது (30 ஆண்டுகள் 181 நாட்கள்) அதன்பிறகு தனது முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் அறிமுகமானபோது அவரது வயது (30 ஆண்டுகள் 307 நாட்கள்). தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் அறிமுகமானபோது அவருடைய வயது (32 ஆண்டுகள் 148 நாட்கள்).

இதையும் படிங்க : IND vs AUS : அறிமுகப்போட்டியிலேயே வரலாற்று சாதனையை நிகழ்த்திய ஆஸி வீரர் – விவரம் இதோ

இப்படி இந்திய அணிக்காக மூன்று விதமான சர்வதேச கிரிக்கெட்டிலும் 30 வயதை கடந்த பிறகு அறிமுகமான முதல் இந்திய வீரர் என்ற வித்தியாசமான சாதனையை சூரியகுமார் யாதவ் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement