IND vs SA : டி20 கிரிக்கெட்டில் 2 புதிய உலக சாதனைகள் உட்பட படைத்த சாதனைகளின் பட்டியல் இதோ

Suryakumar YAdav
- Advertisement -

உலகக் கோப்பைக்கு முன்பாக சொந்த மண்ணில் கடைசியாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று வரும் இந்தியா முதல் போட்டியில் வென்று முன்னிலை பெற்றது. அந்த நிலையில் வெற்றியாளரை தீர்மானிக்கும் 2வது போட்டி அக்டோபர் 2ஆம் தேதியன்று கவுகாத்தியில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா 20 ஓவர்களில் அதிரடியாக விளையாடி 237/3 ரன்கள் சேர்த்தது. ஆரம்பத்திலேயே நங்கூரமாகவும் அதிரடியாகவும் 96 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவுக்கு வலுவான தொடக்கம் கொடுத்த ஓப்பனிங் ஜோடியில் கேப்டன் ரோகித் சர்மா 5 பவுண்டரி 1 சிக்சருடன் 43 (37) ரன்களில் ஆட்டமிழக்க கேஎல் ராகுல் 5 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 57 (28) ரன்களில் அவுட்டானார்.

அதை பயன்படுத்தி 3வது விக்கெட்டுக்கு 102 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெளுத்து வாங்கிய சூர்யகுமார் யாதவ் 5 பவுண்டரி 5 சிக்சருடன் 61 (22) ரன்களை விளாசி ரன் அவுட்டானாலும் அவருடன் விளையாடிய விராட் கோலி தனது பங்கிற்கு 7 பவுண்டரி 1 சிக்சருடன் 49* (28) ரன்கள் எடுத்தார். இறுதியில் தினேஷ் கார்த்திக் அதிரடியாக 17* (7) ரன்கள் எடுத்து பினிஷிங் கொடுக்க தென் ஆப்ரிக்கா சார்பில் அதிகபட்சமாக கேஷவ் மஹராஜ் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

போராடிய மில்லர்:
அதை தொடர்ந்து 238 ரன்களை துரத்திய தென் ஆப்பிரிக்காவுக்கு கேப்டன் பவுமா 0, ரோசவ் 0 என முக்கிய வீரர்கள் ஆரம்பத்திலேயே அடுத்தடுத்த டக் அவுட்டானதால் 1/2 என திணறியது. அதனால் காப்பாற்ற போராடிய மார்க்ரம் 33 (19) ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து களமிறங்கிய டேவிட் மில்லர் மற்றொரு தொடக்க வீரர் டீ காக் உடன் இணைந்து மேற்கொண்டு விக்கெட்டை விடாமல் அதிரடியாக விளையாடினார். நேரம் செல்லசெல்ல இந்திய பவுலர்களை வெளுத்து வாங்கிய இந்த ஜோடி கடைசி வரை அவுட்டாகாமல் வெற்றிக்கு போராடிய போதிலும் 20 ஓவர்களில் 221/3 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

அதில் சற்று மெதுவாக விளையாடிய டீ காக் 3 பவுண்டரி 4 சிக்சருடன் 69* (48) ரன்கள் எடுக்க மறுபுறம் பந்தாடிய மில்லர் 8 பவுண்டரி 7 சிக்சருடன் சதமடித்து 106* (47) ரன்கள் குவித்த போதிலும் 16 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா தோற்றது. அதனால் பந்து வீச்சில் சொதப்பினாலும் பேட்டிங்கில் அசத்தியதால் வென்ற இந்தியா 2 – 0* (3) என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது.

- Advertisement -

சூர்யாவின் சாதனைகள்:
முன்னதாக இப்போட்டியில் ரோகித், ராகுல், விராட் என அனைத்து பேட்ஸ்மேன்களும் ரன்கள் அடித்தாலும் தற்சமயத்தில் உச்சகட்ட பார்மில் இருக்கும் சூர்யகுமார் யாதவ் வழக்கம்போல களமிறங்கிய முதல் பந்திலிருந்தே மைதானத்தின் நாலா புறங்களிலும் சூறாவளியாக சுழன்றடித்து ரசிகர்களை மகிழ்வித்து இந்தியாவின் வெற்றிக்கு கருப்பு குதிரையாக செயல்பட்டார்.

1. இப்போட்டியில் 61 (22) ரன்களைக் குவித்த அவர் பந்துகள் அடிப்படையில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 1000 ரன்களை விளாசிய பேட்ஸ்மேன் என்ற ஆஸ்திரேலியாவின் கிளன் மேக்ஸ்வெல் சாதனையை தகர்த்தது புதிய உலக சாதனையை படைத்துள்ளார். அந்தப் பட்டியல்:
1. சூர்யகுமார் யாதவ் : 573*
2. கிளன் மேக்ஸ்வெல் : 604
3. கோலின் முன்றொ : 635
4. எவின் லெவிஸ் : 640
5. திசாரா பெரேரா : 654

- Advertisement -

2. மேலும் இப்போட்டியில் 5 சிக்ஸர்களை பறக்க விட்ட அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் 50 சிக்சர்களை அடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற வரலாற்று உலக சாதனை படைத்தார். அந்த பட்டியல்:
1. சூரியகுமார் யாதவ் : 50* (2022)
2. முகமது ரிஸ்வான் : 42 (2021)
3. மார்ட்டின் கப்டில் : 41 (2021)

3. மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 1000 ரன்களை கடந்த 9வது இந்திய வீரர் என்ற பெருமையையும் இன்னிங்ஸ் அடிப்படையில் அதிவேகமாக 1000 ரன்கள் குவித்த 3வது இந்திய வீரர் என்ற சாதனையும் படைத்தார். அந்த பட்டியல்:
1. கேஎல் ராகுல் : 27 இன்னிங்ஸ்
2. விராட் கோலி : 29 இன்னிங்ஸ்
3. சூரியகுமார் யாதவ் : 31 இன்னிங்ஸ்*

- Advertisement -

4. அதுபோக இப்போட்டியில் 18 பந்துகளில் அரைசதம் அடித்த அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக அரைசதம் அடித்த 2வது இந்திய பேட்ஸ்மேன் என்ற ராகுலின் சாதனையை சமன் செய்தார். அந்தப் பட்டியல்:
1. யுவராஜ் சிங் : 12
2. சூர்யகுமார் யாதவ் : 18*
3. கேஎல் ராகுல் : 18
4. கவுதம் கம்பீர் : 19

இதையும் படிங்க : உள்ளே புகுந்து அலறவிட்ட பாம்பு, மழை வராமலேயே 2 முறை நிறுத்தப்பட்ட 2வது டி20 போட்டி – என்ன நடந்தது?

5. அத்துடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் மிடில் ஓவர்களில் 500 ரன்களை குவித்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றையும் அவர் எழுதினார். அந்த பட்டியல்:
1. சூரியகுமார் யாதவ் : 524* (2022)
2. விராட் கோலி : 381 (2016
3. ஷிகர் தவான் : 324 (2018)

Advertisement