கபில் தேவ், தோனி, ரோஹித்துக்கு அடுத்து 4 ஆவது கேப்டனாக மாபெரும் சாதனை நிகழ்த்த – சூர்யகுமாருக்கு வாய்ப்பு

Suryakumar Yadav
- Advertisement -

உலக கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பை தொடரின் மாபெரும் இறுதி போட்டியானது இன்று மார்ச் 8-ஆம் தேதி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்த காத்திருக்கின்றன. இதன் காரணமாக தற்போது இவ்விரு அணிகளை சேர்ந்த வீரர்களும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

சூரியகுமார் யாதவ் இந்திய கேப்டனாக நிகழ்த்த காத்திருக்கும் சாதனை :

இந்நிலையில் இன்று நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் இந்த டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் பட்சத்தில் நான்காவது இந்திய கேப்டனாக சூரியகுமார் யாதவ் மாபெரும் சாதனையை நிகழ்த்த காத்திருக்கிறார். அந்த வகையில் அவர் நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் :

- Advertisement -

கடந்த 1983-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக கபில் தேவ் கேப்டனாக ஐசிசி உலக கோப்பையை முதல் முறையாக பெற்றுக் கொடுத்தார். அவருக்கு அடுத்து தோனி 2007 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் டி20 மற்றும் ஒருநாள் உலக கோப்பைகளை வென்று கொடுத்தார். அதன் பின்னர் ரோகித் சர்மா கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையை இந்திய அணியின் கேப்டனாக வெற்றி பெற்று கொடுத்தார்.

இப்படி மூன்று கேப்டன்கள் இந்திய அணிக்காக ஐசிசி கோப்பையை வென்று கொடுத்த வேளையில் இந்த 2026 டி20 உலக கோப்பையை சூரியகுமார் யாதவ் வென்று கொடுக்கும் பட்சத்தில் நான்காவது இந்திய கேப்டனாக இந்திய அணிக்கு ஐசிசி சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்த கேப்டன் என்ற சாதனை பட்டியலில் அந்த மூவருடன் இணைவார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : நான் செய்ஞ்ச இந்த விடயத்தால் அக்சர் படேல் ரொம்பவே கஷ்டப்பட்டார் – ஒப்புக்கொண்ட சூரியகுமார் யாதவ்

அதோடு நடப்பு சாம்பியனாக இந்த தொடரில் பங்கேற்று விளையாடி வரும் இந்திய அணி இன்றைய போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் அடுத்தடுத்த டி20 உலக கோப்பையை கைப்பற்றிய முதல் அணியாகவும், அதிகமுறை டி20 உலககோப்பையை வென்ற அணியாகவும் சாதனை நிகழ்த்த வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement