நான் செய்ஞ்ச இந்த விடயத்தால் அக்சர் படேல் ரொம்பவே கஷ்டப்பட்டார் – ஒப்புக்கொண்ட சூரியகுமார் யாதவ்

SKY and Axar
- Advertisement -

சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 கிரிக்கெட் அணியானது தற்போது நடைபெறும் 2026 டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் லீக் சுற்று ஆட்டங்களில் நான்கு போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி சூப்பர் 8 சுற்று போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராக வெற்றி பெற்றது. ஆனால் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின் போது 76 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது.

அக்சர் பட்டேல் ரொம்பவே வருத்தப்பட்டார் : சூரியகுமார் யாதவ்

இந்த போட்டியின் போது இந்திய அணியின் துணை கேப்டனும், நட்சத்திர சுழற்பந்து வீச்சாளருமான அக்சர் பட்டேல் பிளேயிங் லெவனில் விளையாடாமல் அவருக்கு பதில் வாஷிங்டன் சுந்தர் விளையாடியதே தோல்விக்கு காரணம் என்று அப்போது பேசப்பட்டது. பின்னர் வாஷிங்டன் சுந்தர் மீண்டும் அணியிலிருந்து நீக்கப்பட்ட தொடர்ச்சியாக அக்சர் பட்டேல் விளையாடி வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் தான் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக அவரை நீக்க வேண்டும் என்று எடுத்த அந்த முடிவு அக்சர் பட்டேலுக்கு பெரிய வருத்தத்தை அளித்ததாகவும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : பயிற்சியாளரும் நானும் இணைந்து தான் அனைத்து வகையான கடினமான முடிவுகளையும் எடுக்கிறோம். அந்த வகையில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியின் போது அக்சர் பட்டேலை நாங்கள் நீக்கையில் அவர் மிகவும் கஷ்டப்பட்டார்.

அவர் மகிழ்ச்சியாக இல்லை என்பதையும் நாங்கள் புரிந்து கொண்டோம். ஆனால் எதற்காக நாங்கள் நீக்கினோம் என்ற தெளிவான விளக்கத்தையும் அவருக்கு கொடுத்திருந்தோம். அந்த போட்டியின் போது அதிகளவு இடதுகை ஆட்டக்காரர்கள் தென்னாப்பிரிக்க அணியில் இருந்ததன் காரணமாகவே அக்சர் பட்டேலை நீக்கி வாஷிங்டன் சுந்தரை விளையாட வைத்தோம்.

- Advertisement -

இதையும் படிங்க : இந்த ஒரு காரணம் போதும்.. நான் பார்த்ததில் பெஸ்ட் பவுலர் பும்ரா தான் – பாராட்டிய ஸ்டூவர்ட் பிராடு

ஆனாலும் அந்த முடிவு எங்களுக்கு பாதகமாக அமைந்தது. நிச்சயம் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் அக்சர் பட்டேல் விளையாடுவார். வருண் சக்கரவர்த்தியின் பௌலிங் ஃபார்ம் குறித்து நாங்கள் பெரிதாக வருத்தப்பட போவதில்லை. ஏனெனில் உலகின் நம்பர் ஒன் டி20 பவுலரான அவர் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை நன்கு அறிந்திருப்பார் என சூரியகுமார் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement