இந்த ஒரு காரணம் போதும்.. நான் பார்த்ததில் பெஸ்ட் பவுலர் பும்ரா தான் – பாராட்டிய ஸ்டூவர்ட் பிராடு

Stuart Broad
- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா மூன்று வகையான இந்திய கிரிக்கெட் அணியிலும் முக்கிய வீரராக இடம் பிடித்து விளையாடி வருகிறார். காயம் மற்றும் பணிச்சுமை காரணமாக முக்கிய தொடர்களில் மட்டுமே பங்கேற்று விளையாடி வரும் அவர் தற்போது இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்று மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி பலரது மத்தியிலும் பாராட்டுக்களை பெற்று வருகிறார்.

ஜஸ்ப்ரீத் பும்ராவை பாராட்டிய : ஸ்டூவர்ட் பிராடு

அதிலும் குறிப்பாக இங்கிலாந்து அணிக்கு எதிராக அண்மையில் நடைபெற்ற முடிந்த அரையிறுதி போட்டியில் விளையாடிய அவர் இறுதி கட்டத்தில் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணிக்கு வெற்றியை தேடித்தந்தார். இங்கிலாந்து அணிக்கு எதிரான அவரது அசத்தலான பந்துவீச்சிற்கு பிறகு பலரும் பும்ராவின் பந்துவீச்சு குறித்து பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

அந்தவகையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான ஸ்டூவர்ட் பிராடு நான் நேரில் பார்த்ததில் பும்ரா தான் தலைசிறந்த பந்துவீச்சாளர் என்று தனது பாராட்டினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : இப்போது மட்டுமல்லாமல் எப்போதுமே சிறந்த வேகப்பந்து வீச்சாளர் என்றால் ஜஸ்ப்ரீத் பும்ராவின் பெயரை நான் கூறுவேன்.

ஏனெனில் மால்கம் மார்ஷல், ரிச்சர்ட் ஹார்ட்லி, ஆம்புரோஸ், மெகராத் போன்ற பல்வேறு சிறப்பான வேகப்பந்து வீச்சாளர்கள் கடந்த காலத்தில் இருந்திருக்கிறார்கள். ஆனால் பும்ராவை போன்ற ஒரு பவுலரை நான் பார்த்ததில்லை. ஏனெனில் உலகக்கோப்பை அரையிறுதி போட்டியின் போது இப்படி ஒரு அழுத்தமான சூழலில் எந்த ஒரு பந்துவீச்சாளரும் சிறப்பாக பந்து வீசியதாக எனக்கு தெரியவில்லை.

- Advertisement -

இதையும் படிங்க : ரோஹித் சர்மாவின் அந்த வழியை தான் நானும் பாலோ பண்றேன்.. கப் நமக்கு தான் – சூரியகுமார் யாதவ் பேட்டி

தற்போது நவீன கிரிக்கெட் உலகில் பலரும் பௌலர்களை அடித்து நொறுக்கும் வேளையில் பும்ராவுக்கு எதிராக பேட்ஸ்மேன்கள் கஷ்டப்படுகிறார்கள். எந்த பேட்ஸ்மேனுக்கு எதிராக எவ்வாறு வீச வேண்டும்? எந்த வேகத்தில் வீச வேண்டும்? மைதானத்தின் தன்மை எவ்வாறு உள்ளது? என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் பும்ரா அதற்கு ஏற்றவாறு பந்துவீசுகிறார். என்னைப் பொருத்தவரை நான் பார்த்ததில் ஆல் டைம் பெஸ்ட் பவுலர் என்றால் அது பும்ரா தான் என ஸ்டூவர்ட் பிராடு பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement