ஒரே ஐபிஎல் சீசனில்.. ஜாம்பவான்கள் சச்சின், ஜெயசூர்யாவின் 18,15 வருட சாதனைகளை உடைத்த சூரியகுமார்

Suryakumar Yadav
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்று நிறைவு பெற்றுள்ளது. அதில் பஞ்சாப், பெங்களூரு, குஜராத், மும்பை அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. அதில் ஹர்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் ஆரம்பகட்ட போட்டிகளில் தடுமாற்றமாக விளையாடி புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் தடுமாறியது. ஆனால் அதற்கடுத்த போட்டிகளில் அடுத்தடுத்து வெற்றிகளைப் பெற்ற மும்பை பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

அந்த அணியின் இந்த வெற்றிகளுக்கு பேட்டிங் துறையில் நம்பிக்கை நாயகன் சூரியக்குமார் யாதவ் முக்கிய பங்காற்றி வருகிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் தடுமாறினாலும் டி20 போட்டிகளில் சூரியகுமார் வித்தியாசமான ஷாட்டுகளை வைத்துள்ளார். அதனால் எப்படி போட்டாலும் அவர் மைதானத்தின் 360 டிகிரியிலும் அடிக்கும் திறமையைக் கொண்டுள்ளார்.

- Advertisement -

சூரியகுமார் அசத்தல்:

அதனாலேயே இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று ரசிகர்களால் பாராட்டப்படும் சூரியகுமார் இந்த வருடம் 14 போட்டிகளில் இதுவரை 640* ரன்கள் குவித்துள்ளார். இதன் வாயிலாக ஒரு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த மும்பை வீரர் என்ற ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சாதனையை உடைத்துள்ள அவர் புதிய சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன் 2010 ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 618 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை. தற்போது அவருடைய 15 வருட சாதனையை உடைத்துள்ள சூரியகுமார் 2025 ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் 32* சிக்ஸர்களையும் பறக்க விட்டுள்ளார். அதன் வாயிலாக ஒரு ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் சூரியகுமார் படைத்துள்ளார்.

- Advertisement -

2 அபார சாதனைகள்:

இதற்கு முன் 2008 ஐபிஎல் தொடரில் இலங்கையைச் சேர்ந்த அதிரடி ஜாம்பவான் வீரர் சனாத் ஜெயசூர்யா மும்பை அணிக்காக 31 சிக்சர்கள் அடித்ததே முந்தைய சாதனை. தற்போது அவருடைய 18 வருட சாதனையை உடைத்துள்ள சூரியகுமார் மும்பை அணியின் ஆல் டைம் சிறந்த வீரர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார். மேலும் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் அவர் சாய் சுதர்சன் (679), சுப்மன் கில் (649) ஆகியோருக்குப் பின் 3வது இடத்தில் இருக்கிறார்.

இதையும் படிங்க: பஞ்சாப் – பெங்களூரு போட்டியில் எந்த ஆணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறும் – ஆகாஷ் சோப்ரா கணிப்பு

இதைத் தொடர்ந்து பிளே ஆப் சுற்றில் மும்பை அணி எலிமினேட்டர் போட்டியில் குஜராத்தை சந்திக்கிறது. அந்தப் போட்டியில் மும்பை அணியின் வெற்றிக்கு சூரியகுமார் சிறப்பாக விளையாடுவது அவசியமாகிறது. அப்போட்டி வரும் மே 30ஆம் தேதி முல்லான்பூரில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement