- Advertisement -
ஆசிய கோப்பை

ஆசியக்கோப்பை விவகாரம்.. சூரியகுமார் யாதவ் மற்றும் ஹாரிஸ் ரவூப் ஆகியோர் மீது – ஐ.சி.சி எடுத்துள்ள நடவடிக்கை

அண்மையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய வேளையில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி ஒன்பதாவது முறையாக ஆசிய கோப்பை தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. இந்தத் தொடரை வென்ற பின்னர் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவரும், பாகிஸ்தான் உள்துறை அமைச்சருமான மொஹ்சின் நக்வியிடம் இருந்து கோப்பையை வாங்க மறுத்த இந்திய அணி கோப்பையில்லாமலே வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டது.

சூரியகுமார் யாதவ் மற்றும் ஹாரிஸ் ரவூப் மீது நடவடிக்கை எடுத்த ஐ.சி.சி :

அதோடு மொஹ்சின் நக்வியும் இந்திய அணிக்கு ஆசிய கோப்பை வேண்டுமெனில் சூரியகுமார் யாதவுடன் மொத்தமாக வீரர்கள் அனைவரும் ஐக்கிய அரபு அமீரகம் வந்து பிரத்யேக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்து கோப்பையை எடுத்துச் சென்றார். இந்த விவகாரம் அப்போதே பெரியளவில் பேசு பொருளாக மாறியது.

- Advertisement -

அதேவேளையில் பிசிசிஐயும் இந்தியா அணியிடம் ஆசியக் கோப்பை ஒப்படைக்க வேண்டும் என ஐசிசி-யிடம் கோரிக்கை வைத்துள்ளது. இந்நிலையில் ஆசியக் கோப்பை தொடரின் போது இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது இந்திய வீரர்கள் பாகிஸ்தான் அணியுடன் கைகுலுக்க மறுத்தனர்.

அதேபோன்று மைதானத்தில் இந்திய வீரர்களும் சரி, பாகிஸ்தான் வீரர்களும் சரி சற்று மோசமான சைகைகளை போட்டியின் போது வெளிப்படுத்தி இருந்தனர். அந்த விவகாரம் அப்போதே சூடு பிடித்திருந்தது. இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளரான ஹாரிஸ் ரவூப் ஆகியோருக்கு ஐசிசி தண்டனை விதித்துள்ளது.

- Advertisement -

சூர்யகுமார் யாதவ் போட்டிக்கு பிறகு இந்த வெற்றியை தனிப்பட்ட முறையில் பாகிஸ்தான் அரசியலை விமர்சித்துப் பேசும் வகையில் தனது பேட்டியை அளித்ததால் சூர்யகுமார் யாதவிற்கு போட்டி கட்டணத்தில் இருந்து 30 சதவீதம் அபராதத்தை ஐசிசி விதித்துள்ளது.

இதையும் படிங்க : ப்ளீஸ் ஏபிடி எனக்கு இந்த ஹெல்ப் பண்ணுங்க.. பேலன்ஸ் பண்ண முடியல.. சூரியகுமார் வெளிப்படையான கோரிக்கை

அதேபோன்று ஹாரிஸ் ரவூப் விமானம் விழுந்து நொறுங்குவது போன்ற சைகையை செய்ததால் அவருக்கு இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்றபடி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளைச் சேர்ந்த மூன்று வீரர்களுக்கு அபராதம் எதுவும் இல்லாமல் எச்சரிக்கை மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -