ப்ளீஸ் ஏபிடி எனக்கு இந்த ஹெல்ப் பண்ணுங்க.. பேலன்ஸ் பண்ண முடியல.. சூரியகுமார் வெளிப்படையான கோரிக்கை

- Advertisement -

மும்பையை சேர்ந்த கிரிக்கெட் வீரர் சூரியகுமார் யாதவ் உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதன் பயனாக மிகவும் தாமதமாக 31 வயதில் இந்தியாவுக்காக அறிமுகமான அவர் டி20 கிரிக்கெட்டில் எதிரணி எப்படி போட்டாலும் அடித்து நொறுக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அந்த வகையில் இந்திய அணியின் நிறைய வெற்றிகளில் பங்காற்றிய அவர் உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேனாக முன்னேறி சாதனை படைத்தார்.

மைதானத்தின் நாலாபுரமும் வித்தியாசமான ஷாட்டுகளால் பவுண்டரி மற்றும் சிக்ஸர்களை அடித்த அவரை இந்தியாவின் மிஸ்டர் 360 என்று ஜாம்பவான் ஏபி டீ வில்லியர்ஸ் உள்பட நிறைய முன்னாள் வீரர்கள் பாராட்டினர். அப்படி டி20 போட்டிகளில் தன்னை சாம்பியன் பிளேயராக நிரூபித்த சூரியகுமார் கொஞ்சம் மெதுவாக விளையாட வேண்டிய ஒருநாள் கிரிக்கெட்டில் மிகவும் மோசமாக விளையாடினார்.

- Advertisement -

சூர்யகுமார் ஓப்பன் கோரிக்கை:

குறிப்பாக 2023ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் அவர் ஹாட்ரிக் கோல்டன் டக் அவுட்டாகி மோசமான உலக படைத்தார். அத்துடன் 2023 உலகக்கோப்பை ஃபைனலில் மோசமாக விளையாடிய அவர் இந்தியாவின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தார். அதனால் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு செட்டாக மாட்டார் என்று கருதிய தேர்வுக்குழு அவரை மொத்தமாக கழற்றி விட்டுள்ளது.

அதே சமயம் தரமான டி20 பிளேயராக அறியப்படும் சூரியகுமார் இந்தியாவின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் டி20 போல ஒருநாள் கிரிக்கெட்டிலும் அசத்த விரும்புவதாக சூரியகுமார் தெரிவித்துள்ளார். அதற்காக தமக்கு உதவுமாறு அவர் தென்னாப்பிரிக்கா ஜாம்பவான் ஏபி டீ வில்லியர்ஸிடம் வெளிப்படையான கோரிக்கை வைத்துள்ளார். இது பற்றி சூரியகுமார் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

ஏபிடி கவனிப்பாரா:

“ஏபி’யை சீக்கிரம் சந்திக்கும் போது எப்படி உங்களால் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கிடையே சமநிலையை கையாள முடிந்தது? என்று கேட்பேன். என்னால் அதை செய்ய முடியவில்லை. ஒருநாள் போட்டிகள் டி20 போலவே விளையாடப்படும் என்று நான் நினைத்தேன். அந்த 2 வகையான ஃபார்மெட்டிலும் வெற்றிகரமாக விளையாட என்ன செய்தீர்கள்? என்று அவரிடம் நான் கேட்க விரும்புகிறேன்”

இதையும் படிங்க: 91 கோடி.. வைரம் டூ சோலார் பேனல்.. உ.கோ வென்ற இந்திய மகளிரணிக்கு அடித்த ஜாக்பாட் பரிசுகள்

“எனவே ஏபி ஒருவேளை நீங்கள் இந்த பேட்டியை பார்த்தால் வேகமாக என்னை தொடர்பு கொண்டு ஆலோசனை தெரிவியுங்கள். ஏனெனில் அடுத்த 3 – 4 வருடங்கள் விளையாட உள்ள எனக்கு அது மிகவும் முக்கியம். நான் ஒருநாள் கிரிக்கெட்டிலும் விளையாடுவதற்கு மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறேன். எனவே ப்ளீஸ் உதவி செய்யுங்கள். என்னால் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு இடையேயான சமநிலையை கையாள முடியவில்லை” என்று கூறினார்.

Advertisement