IND vs WI : அதுல சொதப்புறது உண்மை தான், அதை ஒத்துக்க நான் அவமானப்படல – தன் மீதே சூரியகுமார் வருத்தமான பேட்டி

Suryakumar Yadav Press
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் முதலிரண்டு போட்டிகளில் 2016க்குப்பின் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து தலை குனிந்த இந்தியா முக்கியமான 3வது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை வெல்லும் வாய்பபை தக்க வைத்து கொண்டுள்ளது. கயானாவில் நடைபெற்ற அப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயித்த 160 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு அறிமுகப் போட்டியில் ஜெய்ஸ்வால் 1, சுப்மன் கில் 6 என தொடக்க வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

அதனால் 38/2 என தடுமாறிய இந்தியாவுக்கு நான் இருக்கிறேன் என்ற வகையில் அடுத்ததாக களமிறங்கி இந்த தொடரின் முதல் முறையாக தம்முடைய சரவெடி பேட்டிங்கை வெளிப்படுத்திய நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவ் 10 பவுண்டரி 4 சிக்சருடன் 83 (4 ரன்கள் அடித்து வெற்றியை உறுதி செய்து ஆட்டமிழந்தார். அவருடன் திலக் வர்மா 49* ரன்களும் கேப்டன் பாண்டியா 20* ரன்களும் எடுத்ததால் 17.5 ஓவரிலேயே இலக்கை எட்டிய இந்தியா சிறப்பான வெற்றி பெற்றது.

- Advertisement -

ஒத்துக்குறேன் அவமானப்படல:
இந்த வெற்றிக்கு சந்தேகமின்றி இக்கட்டான சூழ்நிலையில் 188.64 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி 2016க்குப்பின் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக ஒரு டி20 தொடரில் சந்திக்கும் தோல்வியிலிருந்து இந்தியாவை காப்பாற்றிய சூரியகுமார் ஆட்டநாயகன் விருது வென்றார். அத்துடன் சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேகமாக 100 சிக்சர்கள் அடித்த இந்திய வீரர் அதிவேகமாக 12 ஆட்டநாயகன் விருதுகள் வென்ற வீரர் போன்ற சாதனைகளையும் படைத்து அட்டகாசம் செய்து வரும் அவர் சற்று மெதுவாக விளையாட வேண்டிய ஒருநாள் ஆரம்பம் முதலே தடுமாறி வருவது அனைவருக்கும் ஆச்சரியமாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் நம்முடைய செயல்பாடுகள் சுமாராக இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ள அவமானப்படவில்லை என்று சூரியகுமார் யாதவ் தன் மீதே வருத்தத்தை தெரிவித்துள்ளார். இருப்பினும் அதிகமாக டி20 கிரிக்கெட்டில் விளையாடுவதால் ஒருநாள் போட்டிகளில் தடுமாறுவதாக ராகுல் டிராவிட் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் கொடுத்த ஆலோசனைகளை பின்பற்றி கடினமான பயிற்சிகளை மேற்கொள்ளும் தாம் விரைவில் அசத்துவேன் என்றும் சூரியகுமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி போட்டியின் முடிவில் அவர் பேசியது பின்வருமாறு. “உண்மையை சொல்ல வேண்டுமெனில் ஒருநாள் கிரிக்கெட்டில் என்னுடைய புள்ளி விவரங்கள் மோசமாக இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்வதில் எனக்கு எந்த அவமானமும் இல்லை. எனவே நீங்கள் உண்மையாக பேச வேண்டும். ஆனால் அதற்காக மனம் தளராமல் நீங்கள் எப்படி முன்னேறுகிறீர்கள் என்பது முக்கியமாகும். மேலும் ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் சார் ஆகியோர் நான் ஒருநாள் போட்டிகளில் அதிகமாக விளையாடாததாலேயே தடுமாறுவதாவும் அதைப் பற்றி சிந்திக்குமாறும் அறிவுரை வழங்கினர்”

“குறிப்பாக கடைசி 10 – 15 ஓவர்களில் விளையாடினால் அணிக்காக என்ன செய்ய முடியும் என்பதை பற்றி சிந்துக்குமாறு அவர்கள் சொன்னார்கள். எனவே அதற்கேற்றார் போல் மாற்றங்களை செய்து பொறுப்புடன் எப்படி வாய்ப்புகளை பெறுவது என்பது என்னுடைய கையில் தான் இருக்கிறது. மேலும் டி20 கிரிக்கெட்டில் நான் அதிகமாக விளையாடுகிறேன். ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகமாக விளையாடாததால் அது மிகவும் சவாலாக இருக்கிறது. அதில் ஆரம்பத்தில் சில விக்கெட்டுகள் விழுந்தால் நீங்கள் சற்று டெஸ்ட் கிரிக்கெட்டை போல மெதுவாக விளையாடி பின்னர் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடும் டி20 அணுகுமுறையை பின்பற்ற வேண்டும்”

இதையும் படிங்க:வீடியோ : என்னையா கலாய்ச்சீங்க? 28 போர்ஸ் 11 சிக்ஸ், இங்கிலாந்தில் இரட்டை சதமடித்த பிரிதிவி ஷா – ரோஹித்தை மிஞ்சி அசத்தல் சாதனை

“எனவே ஒருநாள் போட்டிகளில் எப்படி சிறப்பாக செயல்பட வேண்டும் என்று அணி நிர்வாகம் சொன்னவற்றை நான் பின்பற்ற முயற்சித்து வருகிறேன். குறிப்பாக சில நேரங்களை எடுத்து கடைசியில் அதிரடியாக விளையாட முயற்சிக்கிறேன். எனவே அணி நிர்வாகத்தின் நம்பிக்கையை விரைவில் காப்பாற்றுவேன் என நம்புகிறேன்” என கூறினார். முன்னதாக டி20 கிரிக்கெட்டில் 51 போட்டிகளில் 1780 ரன்களை எடுத்து மிரட்டலாக செயல்பட்டு உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக ஜொலிக்கும் அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் 26 போட்டிகளில் 511 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement