தோனியை தொடர்ந்து ஜோங்கோ ஜீப் வாங்கிய சூரியகுமார் யாதவ் – விலை மட்டும் எவ்வளவு தெரியுமா?

Jonga
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி வாகனங்களின் மீது தீராத காதல் கொண்டவர் என்பது நாம் அறிந்ததே. அவரது வீட்டில் வாகனங்களுக்கு என தனி கேரேஜே அமைத்து பல்வேறு வாகனங்களையும் வாங்கி குவித்துள்ளார். மேலும் இந்திய ராணுவத்தின் மீது ஆர்வமாக இருக்கும் தோனி ராணுவத்தில் பயன்படுத்தும் சில வகையான ஜீப்களையும் வாங்கி தனது கேரேஜில் நிறுத்தி வைத்துள்ளார். அந்த வகையில் நிசான் நிறுவனத்தின் ஜோங்கா ஜீப்பையும் தோனி வைத்துள்ளார்.

அந்த வரிசையில் தற்போது இந்திய அணியின் மற்றொரு இளம் முன்னணி வீரரான சூர்யகுமார் யாதவ் தோனியை போலவே விதவிதமாக கார்களை வாங்கி சேகரித்து வருகிறார். அந்த வகையில் அவரது வீட்டிற்கு புதிதாக நிசான் நிறுவனத்தின் ஜோங்கா ஜீப் வந்துள்ளது.

- Advertisement -

இந்திய ராணுவ பயன்பாட்டில் 1969 முதல் 1999 வரை பயன்படுத்தப்பட்ட இந்த ஜாங்கோ ஜீப்பானது அதன் பிறகு நிறுத்தப்பட்டது. தற்போது இந்த ஜீப்புகள் தயாரிக்க பிரத்யேக லைசென்ஸ் நிசான் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மீண்டும் இவ்வகையான ஜீப்புகள் தயாரிக்கப்படுகின்றன. வெகுசிலரே விரும்பி வாங்கும் இந்த ஜாங்கோ ஜீப்பை தற்போது சூர்யகுமார் யாதவ் வாங்கியுள்ளார்.

இதற்கு முன்னதாக தோனியும் ராஞ்சி நகரை தனது ஜாங்கோ ஜீப் மூலம் வலம் வரும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் நாம் பார்த்திருப்போம். அந்த வகையில் தற்போது சூரியகுமார் யாதவும் என்னுடைய புதிய HULK-க்கு ஹலோ சொல்லுங்க என்று அவர் வாங்கிய இந்த ஜாங்கோ ஜீப் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : பெங்களுருவில் அப்பார்ட்மெண்ட் கொடுக்க முன்வந்த ரசிகர்கள் – ஏ.பி.டி கொடுத்த ரிப்ளை

இந்த ஜீப்பின் இந்திய விலை மட்டும் சுமார் 60 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ள சூரியகுமார் யாதவ் தற்போது அகமதாபாத்தில் பயிற்சியை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement