பெங்களுருவில் அப்பார்ட்மெண்ட் கொடுக்க முன்வந்த ரசிகர்கள் – ஏ.பி.டி கொடுத்த ரிப்ளை

ABD
- Advertisement -

தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரரான ஏ.பி.டி வில்லியர்ஸ் பெங்களூர் அணிக்காக கடந்த பல ஆண்டுகளாக விளையாடி வந்தார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்ற அவர் கடந்த பல ஆண்டுகளாகவே ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியின் ரசிகர்களால் மிகவும் அன்பாக பார்க்கப்பட்ட முக்கிய வீரராக திகழ்ந்தார். ரசிகர்களின் மத்தியில் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று செல்லமாக அழைக்கப்படும் ஏபி டிவில்லியர்ஸ்க்கு பெங்களூருவில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளது என்பது நாம் அறிந்ததே.

abd 1

- Advertisement -

அவருக்கும் ஆர்சிபி அணிக்கும் இடையேயான பிணைப்பு என்பது பலமான ஒன்று என்பதும் நாம் அறிந்ததே. இந்நிலையில் தனக்கும் பெங்களூரு அணிக்கும் இடையேயான பந்தம் குறித்து தற்போது ஏபி டிவில்லியர்ஸ் சில சுவாரசியமான கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கலந்துரையாடிய ஒரு நேர்காணலின் போது ஏ.பி.டி நிறைய விடயங்களை வெளிப்படையாக பகிர்ந்துகொண்டார்.

அப்போது நெறியாளர் அவரிடம் பெங்களூரு அணியை சேர்ந்த ஆர்சிபி ரசிகர்கள் உங்களுக்கு பெங்களூருவில் அப்பார்ட்மெண்ட் கொடுக்க முன்வந்து இங்கே வந்து விடுமாறு கூறுகிறார்கள். இந்த நகரத்துடனான உங்களுடைய நினைவுகளை குறித்து கொஞ்சம் சொல்லுங்கள் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த ஏபி டிவிலியர்ஸ் கூறுகையில் :

எனக்கு இப்போது மூன்று பிள்ளைகள் உள்ளனர். அதனால் எனக்கு நிறைய அறைகள் அந்த அப்பார்ட்மெண்டில் இருக்க வேண்டுமென்று நகைச்சுவையான பதிலளித்தார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : ஆர்சிபி அணிக்காக கிரிக்கெட் விளையாடுவது சாதாரண ஒன்று கிடையாது. எனக்கும் பெங்களூரு அணிக்கும் இடையே ஆழமான பிணைப்பு உள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : இந்திய அணியில் நான் அவரது மிகப்பெரிய ரசிகன். எனக்கு பிடித்த வீரர் அவர்தான் – ஷாஹீன் அப்ரிடி ஓபன்டாக்

நான் மற்ற பிரான்ச்சைஸிஸ் அணிகளில் விளையாடியபோது இது போன்று உணர்வு பூர்வமாக எந்த ஒரு நிகழ்வையும் உணர்ந்ததில்லை. ஆனால் பெங்களூர் அணிக்காக விளையாடும் போது மட்டும் என் மனது அவர்களுடன் ஒன்றிருந்தது. அதோடு ஆர்சிபி ரசிகர்களும் ஆர்சிபி அணியும் எனக்கு முக்கியமான ஒரு பந்தம் என்று ஏ.பி.டி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement