நான் நினைத்ததை இந்த போட்டியில் சிறப்பாக செய்து முடித்துள்ளேன் – ஆட்டநாயகன் சூர்ய குமார் யாதவ் பேட்டி

SKY
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 21 ஆவது போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்களை குவித்தது.

rrvsmi

- Advertisement -

மும்பை அணியின் சார்பில் அதிகபட்சமாக பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் 47 பந்துகளை சந்தித்து 11 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் என 79 ரன்கள் குவித்தார். கேப்டன் ரோஹித் சர்மா 35 ரன்களும், ஹார்டிக் பாண்டியா 30 ரன்களும் எடுத்து அசத்தினார். அதன் பின்னர் 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 18.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 136 ரன்களை மட்டுமே அடித்தது.

இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியைப் பெற்றது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பாக ஜாஸ் பட்லர் 44 பந்துகளை சந்தித்து 5 சிக்ஸர் மற்றும் 4 பவுண்டரி என 70 ரன்களையும், ஜோப்ரா ஆர்ச்சர் 24 ரன்களும் குவித்தனர். அவர்களை தவிர மற்ற யாரும் 20 ரன்களை கூட அடிக்கவில்லை.

இந்நிலையில் போட்டி முடிந்து பேசிய ஆட்டநாயகன் சூர்யகுமார் யாதவ் கூறுகையில் : இந்த போட்டியில் பெரிய ரன்களை அடிக்கவேண்டும் என்று நினைத்தேன். ஏனெனில் கடைசியாக சில போட்டிகளில் நான் ரன்களை குவிக்கவில்லை மேலும் இம்முறை இறுதிவரை நின்று பேட்டிங் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். இம்முறை டாப் பார்டரில் பொறுப்புடன் விளையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது. என்னுடைய இயற்கையான ஆட்டத்தை விளையாடி சிறப்பான ரன்களை எட்ட உதவியது மகிழ்ச்சி அளிக்கிறது.

Surya kumar 1

இந்த லாக் டவுனில் நான் ஆப் சைடில் விளையாட கற்றுக்கொண்டேன். இப்பொழுது லெக் சைடு ஆடுவதை விட ஆப் சைடில் சிறப்பாக விளையாடி வருகிறேன். இந்த போட்டியின் வெற்றி எங்களுக்கு திருப்தியான ஒரு வெற்றியாக அமைந்தது. நான் நினைத்தது போலவே இறுதிவரை பேட்டிங் செய்து அணியில் நல்ல ஸ்கோரை எட்ட உதவினேன். பவுலர்கள் சிறப்பாக வீசி வெற்றிப்பெற வைத்தனர் என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement