நான் வீட்டில் பத்திரமாக இருக்கிறேன். ஆனால் என் மனசு முழுக்க வான்கடே மைதானம் மீதே இருக்கு – வருத்தமாக பேசிய மும்பை இந்தியன்ஸ் வீரர்

CskvsMi
- Advertisement -

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் கால்பந்து, கிரிக்கெட் போன்ற பெரும் மக்கள் கூடும் விளையாட்டு போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டும் வருகிறது. இதனால் சமீபத்தில் நடைபெற இருந்த அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டன.

Ipl cup

- Advertisement -

மேலும் தற்போது இருக்கும் சூழலை கணக்கில் கொண்டு காலவரையறை இன்றி போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் முற்றிலும் குறைந்த பின்னரே மீண்டும் கிரிக்கெட் குறித்த தெளிவான தகவல் வெளியாகும். பல்வேறு நாடுகளும் தற்போது கொரோனா தாக்கத்தை குறைக்கும் வகையிலே தங்களது பார்வையை செலுத்தி வருகின்றனர்.

அதன்படி இந்தியாவில் நடக்கவிருந்த ஐபிஎல் தொடர் மார்ச் 29ம் தேதிக்குப் பதில் ஏப்ரல் 15ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதற்கு பின்னரும் இந்த தொடர் நடக்குமா என்பது கேள்விக்குறிதான்.

csk-vs-mi

ஏனெனில் தற்போது வரை இந்தியாவில் இந்த வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. அதன் தாக்கத்தை குறைக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்காரணமாக திட்டமிட்டபடி இந்த ஐபிஎல் தொடர் இந்த வருடம் நடத்தப்படுவது பெரும் கேள்விக்குறி தான்.

- Advertisement -

இப்படி சென்று கொண்டிருக்க கடந்த சில தினங்களுக்கு முன்னர் துவங்க இருக்கவேண்டிய ஐபிஎல் தொடரை பற்றி மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் சூர்யகுமார் யாதவ் தனது கருத்தினை தெரிவித்துள்ளார். அதன்படி முதல் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் 29ஆம் தேதி வான்கடே மைதானத்தில் மோதுவதாக இருந்தது.

தற்போது என் மனம் வான்கடே மைதானத்தில் உள்ளது. ஆனால் நான் வீட்டில் இருக்கிறேன் என்று வருத்தத்துடன் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார் சூர்யகுமார் யாதவ் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement