எனது சாதனை உங்களால் முறியடிக்கப்பட்டது மகிழ்ச்சி மஹி பாய் – மனதை நெகிழ்வைத்த ரெய்னா

Raina
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 14 வது லீக் போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற டேவிட் வார்னர் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். அதன்படி முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 164 ரன்களைக் குவித்தது.

srhvscsk

அதிகபட்சமாக அந்த அணியின் இளம் வீரரான பிரியம் கார்க் 26 பந்துகளில் 51 ரன்களையும் அபிஷேக் வர்மா 24 பந்துகளில் 31 ரன்கள் அடித்து அசத்தினார். பின்னர் 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் அடித்தது அதிகபட்சமாக ஜடேஜா 50 ரன்களையும், தோனி 47 ரன்களையும் அடித்தனர்.

- Advertisement -

இதன் காரணமாக சென்னை அணி 7 ரன் வித்தியாசத்தில் மீண்டும் தோல்வி அடைந்து அதிர்ச்சி அளித்தது. பிரியம் கார்க் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் நேற்று இந்தப் போட்டி தோனிக்கு 194 ஐ.பி.எல் போட்டியாக அமைந்தது. இதன் மூலம் ஐபிஎல் தொடரில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை அவர் சுரேஷ் ரெய்னாவிடமிருந்து தட்டிப் பறித்தார் தோனி.

srh

இதுவரை சி.எஸ்.கே அணியின் துணைக்கேப்டனான சுரேஷ் ரெய்னா ஐபிஎல் தொடரில் 193 போட்டியில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனது இந்த சாதனையை முறியடித்த மகேந்திர சிங் தோனிக்கு சுரேஷ் ரெய்னா ட்விட்டர் பக்கத்தில் மூலம் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது :

வாழ்த்துக்கள் மகி பாய் ஐபிஎல் தொடரில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை படைத்து மகிழ்ச்சி. உங்களால் என்னுடைய சாதனை முறியடிக்கப்பட்டது எனக்கு மகிழ்ச்சி. இன்றைய போட்டி சிறப்பாக அமையட்டும் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று தோனிக்கு ஒரு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி குறிப்பிடத்தக்கது.

Advertisement