எனது வாழ்க்கையை படமாக எடுத்தால் இந்த தமிழ் நடிகர் தான் கரெக்ட்டா இருப்பாரு – சுரேஷ் ரெய்னா ஓபன் டாக்

Raina

தல தோனிக்கு அடுத்தபடியாக சென்னை சூப்பர் கிங்ஸின் மிகப்பெரிய வீரர் என்றால் அது சின்ன தல ரெய்னா என்று எல்லோரும் அடித்துக் கூறலாம். அந்த அளவிற்கு சிஎஸ்கே அணிக்காக அவர் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி வருகிறார். தோனிக்கு சென்னையில் எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதே அளவிற்கு சுரேஷ் ரெய்னா விற்கும் ரசிகர்கள் இருப்பது உண்மையே.

Raina

இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக ஐபிஎல் போட்டிகள் நடை பெறாமல் இருப்பதால் வீரர்கள் சமூகவலைதளத்தில் ரசிகர்களின் கேள்விக்கு எந்த வித தயக்கமும் இன்றி பதில் அளித்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த வாரங்களுக்கு முன்பு தனது டுவிட்டர் பக்கத்தில் ரெய்னா ரசிகர்களிடம் உரையாடினார்.

அதில் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த ரெய்னா விமர்சையான கேள்வி ஒன்றினை எதிர்கொண்டார். அந்த கேள்வி யாதெனில் ரசிகர் ஒருவர் உங்களுடைய வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்தால் எந்த ஹீரோ நடித்தால் சரியாக இருக்கும் ? என்று கேள்வி எழுப்பினர்.

பொதுவாகவே இதேபோன்ற கிரிக்கெட் வீரர்களின் வரலாற்று படம் ஏற்கனவே வெளியாகி உள்ளது. அதிலும் குறிப்பாக தோனி, சச்சின் ஆகியோரது வாழ்க்கை வரலாறு படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்தது. அதே வகையில் தற்போது கபில் தேவ் மற்றும் இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் போன்றவர்களின் வாழ்க்கை படமும் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் சுரேஷ் ரெய்னா தனது வாழ்க்கை வரலாற்று படத்தில் ஹிந்தியில் ஷாகித் கபூரும், தமிழில் துல்கர் சல்மானும் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று பதிலளித்துள்ளார். துல்கர் சல்மானும் ரெய்னாவும் ஏற்கனவே நல்ல நட்பில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. அவரின் இந்த கருத்து தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Dulquer

ரெய்னா இந்திய அணிக்காக இதுவரை 18 டெஸ்ட் போட்டிகளிலும் 226 ஒருநாள் போட்டிகளிலும் 78 டி20 போட்டிகளிலும் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் இந்திய அணியில் இடம்கிடைக்காமல் தவித்து வரும் ரெய்னா ஐ.பி.எல் போட்டிகளிலும் மட்டும் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.