- Advertisement -
ஐ.பி.எல்

மறுபடியும் ஐ.பி.எல் வாய்ப்பு கிடைச்சா சி.எஸ்.கே அணிக்காக விளையாட மாட்டேன்.. என் சாய்ஸ் அந்த டீம் தான் – சுரேஷ் ரெய்னா

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை விளையாடி 205 போட்டிகளில் ஒரு சதம் மற்றும் 39 அரை சதங்களுடன் 5528 ரன்கள் குவித்துள்ளார். சென்னை அணியில் பல்வேறு சரித்திர வெற்றிகளுக்கு காரணமாக இருந்த அவரை மிஸ்டர் ஐ பி எல் என்றும் ரசிகர்கள் அன்பாக அழைப்பார்கள்.

எனக்கு அந்த அணியில் விளையாட ஆசை : சுரேஷ் ரெய்னா

அந்த அளவிற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பல ஆண்டுகள் தனது அற்புதமான பங்களிப்பை சுரேஷ் ரெய்னா வழங்கியிருந்தார். சென்னை அணி தடை செய்யப்பட்ட இரண்டு ஆண்டுகளில் குஜராத் லயன்ஸ் அணிக்காக விளையாடிய அவர் மற்றபடி சிஎஸ்கே அணிக்காகவே கரியர் முழுவதும் விளையாடி இருந்தார்.

- Advertisement -

கடந்த 2021 ஆம் ஆண்டுக்கு பிறகு சென்னை அணி அவரை ஒதுக்கவே மீண்டும் ஐபிஎல் தொடரில் வேறு அணியில் விளையாட விருப்பம் இல்லாத அவர் அனைத்து வகையான போட்டிகளிலும் இருந்து ஓய்வு அறிவித்து தனது கரியரை முடித்துக் கொண்டார்.

தற்போது வர்ணனையாளராக செயல்பட்டு வரும் அவர் போட்டிகளின் இடையே சுவாரஸ்யமான கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்திய உரையாடல் ஒன்றில் பேசியுள்ள சுரேஷ் ரெய்னா மீண்டும் தனக்கு ஐபிஎல் போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைத்தால் சிஎஸ்கே அணியில் இல்லாமல் வேறொரு அணியில் விளையாட விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சுரேஷ் ரெய்னா குறிப்பிடுகையில் : மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடினால் நானும் ரோகித்தும் இணைந்து விளையாடுவோம். அப்படி அவருடன் வான்கடாவில் பேட்டிங் செய்வது மிகச் சிறப்பாக இருக்கும் என்று சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார். இதன் காரணமாக சிஎஸ்கே அணிக்கு அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவே அவர் விளையாட ஆசைப்படுவது தெளிவாகியுள்ளது.

இதையும் படிங்க : 29/5 டூ 133/7.. ஹைதராபாத்தை ஆப்படித்து வீட்டுக்கு அனுப்பிய மழை.. தப்பிய டெல்லியின் ஸ்டப்ஸ்.. தோனியை முந்தி சாதனை

சி.எஸ்.கே அணிக்காக முழு அர்ப்பணிப்புடன் விளையாடிய அவரை நிர்வாகம் வேண்டுமென்றே ஒதுக்க அதனை ஏற்றுக்கொள்ளாத ரெய்னா மீண்டும் வேறொரு அணிக்கு விளையாட விருப்பமின்றி நிர்வாகத்துடன் முடிவின் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாகவே ஓய்வை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -