அடுத்த வருட ஐ.பி.எல் தொடரில் ரெய்னா ஆட இருக்கும் டீம் இதுதானம் – அவரே கூறிய தகவல்

Raina

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த வருட ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று தொடரிலிருந்து வெளியேறிவிட்டது. பிளே ஆப் சுற்றுக்கு செல்லவில்லை என்றாலும் ஓரளவிற்கு 12 புள்ளிகள் பெற்று ரசிகர்களை திருப்திப்படுத்தி வெளியேறி விட்டது.

Raina-1

ஆனால் தொடர் முடிந்தவுடன் அந்த அணியில் தனது மொத்த அணியை மறுகட்டமைப்பு செய்ய வேண்டிய சூழ்நிலை தான் இருக்கிறது என்று இதனை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி வெளிப்படையாக கூறியிருந்தார்.

அதே நேரத்தில் சுரேஷ் ரெய்னா போன்ற ஒரு மாபெரும் வீரர் அணியில் இல்லாததுதான் இது போன்ற மிகப்பெரிய தோல்விக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்த தொடர் துவங்கும் முன்னரே ரெய்னா தனது தனிப்பட்ட காரணங்களுக்காக தொடரில் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சுரேஷ் ரெய்னா எப்போதும் “மஞ்சள் தான் எனது வாழ்க்கை” என்று குறிப்பிட்டுள்ளார்.

Raina

இதன் காரணமாக நிச்சயம் அடுத்த வருடம் இவருக்கு சென்னை அணியில் இடம் கிடைக்கும் என்று தெரிகிறது. மேலும் தோனி அணியை மறுகட்டமைப்பு செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார். அப்போது சீனியர் வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு கிடைக்குமா ? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

- Advertisement -

raina

டோனிக்கும் அடுத்த வருடம்தான் கடைசி ஐபிஎல் தொடரா ? என்று கேட்கப்பட்டதற்கு கண்டிப்பாக இல்லை என்று கூறி இருந்தார். இப்படி பார்த்தால் தோனியின் தளபதியான சுரேஷ்ரெய்னா அடுத்த வருடம் கண்டிப்பாக ஆடுவார் என்றே தெரிகிறது.