ரோஹித் சர்மாவுக்கு கேப்டனாக அதுதான் கடைசி தொடர்.. வெற்றியோடு போங்க.. வாழ்த்து கூறிய – சுரேஷ் ரெய்னா

Raina
- Advertisement -

பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரானது தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளையில் துபாய் மைதானத்தில் மட்டும் விளையாட இருக்கும் இந்திய அணியானது இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்றி 50 ஓவர் உலகக் கோப்பை தொடரை இழந்த வருத்தத்தை போக்கிக் கொள்ளும் முனைப்புடன் தயாராகி வருகிறது.

ரோஹித்துக்கு கேப்டனாக இதுவே கடைசி தொடர் :

இந்த சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை இந்திய அணி கைப்பற்ற வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. இந்நிலையில் எதிர்வரும் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றால் அது விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா கையில் தான் இருக்கிறது என இந்திய அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் ரோகித் சர்மா தனது ஸ்ட்ரைக் ரேட்டில் மிகச் சிறப்பாக முன்னேறி இருக்கிறார். 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் சமீப காலமாக நடைபெற்று வரும் ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா 120 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி வருகிறார்.

இதன் மூலம் இந்திய அணிக்கு நல்ல வேகமான துவக்கம் கிடைக்கிறது. அதேபோன்று விராட் கோலியும் ஒரு நாள் கிரிக்கெட்டில் ஏகப்பட்ட சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். அவர்கள் இருவருமே மிகப்பெரிய ஸ்கோரை அடிக்கக்கூடிய திறமையான வீரர்கள் அவர்கள் இருவரும் சிறப்பாக விளையாடினால் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி வெற்றி பெறும் என்று நினைக்கிறேன்.

- Advertisement -

அதே போல் ரோகித் சர்மா இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரினை கேப்டனாக வெற்றி பெற்று தர வேண்டும். அப்படி இந்த சாம்பியன்ஸ் டிராபியை அவர் கைப்பற்றினால் இதுவரை இந்திய அணிக்காக நான்கு ஐசிசி கோப்பைகளை வென்ற வீரர் என்ற சாதனையுடன் அவர் வெளியேற வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க : சச்சின் டெண்டுல்கரின் ரெக்கார்டை காலி செய்ய காத்திருக்கும் விராட் கோலி – விவரம் இதோ

என்னை பொறுத்தவரை இந்த எதிர்வரும் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரானது ரோகித் சர்மாவிற்கு கேப்டனாக கடைசி தொடர் என்று நினைக்கிறேன். எனவே அதனை வெற்றியுடன் முடிக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என சுரேஷ் ரெய்னா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement