இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது நாளை பிப்ரவரி 6-ஆம் தேதி நாக்பூர் மைதானத்தில் துவங்க இருக்கிறது. ஏற்கனவே இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை (4-1) என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணியானது அடுத்ததாக ஒருநாள் தொடரையும் கைப்பற்றும் முனைப்புடன் தயாராகி வருகிறது.
சச்சினை முந்த காத்திருக்கும் விராட் கோலி :
இந்நிலையில் இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இணைந்துள்ள நட்சத்திர வீரரான விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மாபெரும் சாதனை ஒன்றினை முறியடிக்கும் வாய்ப்புக்காக காத்திருக்கிறார். அது குறித்த தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த வகையில் இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் 13 ஆயிரத்து 906 ரன்களை அடித்திருக்கும் விராட் கோலி மேலும் இந்த தொடரின் மூன்று போட்டிகளில் 94 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 14000 ரன்களை வேகமாக அடித்த வீரர் என்ற சாதனையில் முதலிடத்தில் இருக்கும் சச்சின் டெண்டுல்கரை பின்னுக்கு தள்ள காத்திருக்கிறார்.
சச்சின் தனது 350-ஆவது இன்னிங்ஸில் சர்வதேச ஒருநாள் போட்டியில் 14,000 ரன்களை கடந்திருந்தார். ஆனால் தற்போது விராட் கோலி 283 இன்னிங்ஸ்களிலேயே விளையாடி 50 சதங்கள் மற்றும் 72 அரைசதங்கள் என 13 ஆயிரத்து 906 ரன்கள் அடித்துள்ளார்.
இந்த தொடரின் மூன்று போட்டிகளையும் சேர்த்து அவர் இந்த சாதனையை முறியடித்தால் கூட 286 போட்டியிலே 14,000 ரன்களை தொடுவார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் சச்சின் மற்றும் சங்கக்கார ஆகியோர் மட்டுமே 14 ரன்களை அடித்திருந்த வேளையில் தற்போது மூன்றாவது வீரராக அதிவேகமாக விராட் கோலி இந்த சாதனையை நிகழ்த்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஜெய்ஸ்வால், அபிஷேக்குடன் எனக்கு விஷம் இல்லை.. வாய்ப்பு வேணும்ன்னா இதை செய்யனும்.. கில் ஓப்பன்டாக்
சமீபகாலமாகவே பேட்டிங் பார்மின்றி தவித்து வரும் விராட் கோலிக்கு இந்த இங்கிலாந்து ஒருநாள் தொடரானது மிக முக்கியமான தொடராக மாறியுள்ளது. ஏனெனில் அண்மையில் ரஞ்சி போட்டியில் விளையாடிய விராட் கோலி 6 ரன்களில் ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.