ஜெய்ஸ்வால், அபிஷேக்குடன் எனக்கு விஷம் இல்லை.. வாய்ப்பு வேணும்ன்னா இதை செய்யனும்.. கில் ஓப்பன்டாக்

Shubman Gill
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று முடிந்த டி20 கிரிக்கெட் தொடரை 4 – 1 என்ற கணக்கில் இந்தியா வென்றது அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா விளையாட உள்ளது. அடுத்ததாக நடைபெறும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தயாராகும் நோக்கத்தில் நடைபெறும் அந்தத் தொடர் பிப்ரவரி 6ஆம் தேதி துவங்குகிறது.

அந்தத் தொடர்களில் சுப்மன் கில் இந்தியாவின் துணைக் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். உண்மையில் தற்சமயத்தில் சுமாரான ஃபார்மில் இருக்கும் அவர் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெறாமல் இந்தியா வெளியேறுவதற்கு ஒரு காரணமாக அமைந்தார். அப்படிப்பட்ட அவர் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டதற்கு ஸ்ரீகாந்த் போன்ற சில முன்னாள் வீரர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள்.

- Advertisement -

பொறாமை விஷம் கிடையாது:

மேலும் அவருக்கு பதில் ஜெய்ஸ்வால் விளையாடலாம் என்று ஸ்ரீகாந்த் வெளிப்படையாகவே கூறினார். இதற்கிடையே அபிஷேக் ஷர்மாவும் ஓபனிங் இடத்தில் அதிரடியாக விளையாடி சுப்மன் கில்லுக்கு போட்டியைக் கொடுத்து வருகிறார். அதனால் அபிஷேக் ஷர்மா, ஜெய்ஸ்வால் ஆகியோர் மீது உங்களுக்கு பொறாமை, போட்டி இருக்கிறதா? என்று செய்தியாளர்கள் கேட்டார்கள்.

அதற்கு அவர்கள் தம்முடைய நண்பர்கள் என்று தெரிவித்த சுப்மன் கில் அவர்களுடன் எந்த விஷமான உறவும் இல்லையென கூறியுள்ளார். இது பற்றி முதல் போட்டிக்கு முன் அவர் பேசியது பின்வருமாறு. “அபிஷேக் என்னுடைய சிறுவயது நண்பர். ஜெய்ஸ்வாலும் என்னுடைய நண்பர். எனவே எங்களுக்கு மத்தியில் எந்த விஷமான உறவும் இல்லை. கண்டிப்பாக உங்களுடைய நாட்டுக்காக விளையாடும் போது ஒவ்வொரு போட்டியிலும் அசத்த விரும்புவீர்கள்”

- Advertisement -

எல்லாம் நண்பர்களே:

“அதற்காக அந்தப் பையன் சிறப்பாக செயல்படக்கூடாது என்று நினைக்க வேண்டியதில்லை. நாட்டுக்காக மற்றும் அணிக்காக நீங்கள் விளையாடுகிறீர்கள். எனவே யார் அவர்களில் அசத்துகிறார்களோ அவர்களுக்கு நீங்கள் வாழ்த்து தான் தெரிவிக்க வேண்டும். இங்கிலாந்து போன்ற நல்ல அணிக்கு எதிராக நாங்கள் இந்த ஒருநாள் தொடரை விளையாடுகிறோம்”

இதையும் படிங்க: சச்சின் சொன்ன அட்வைஸை ஃபாலோ பண்ணி தெளிவாகுங்க.. தடுமாறும் சாம்சனும் அஸ்வின் ஆலோசனை

“எனவே இந்தத் தொடரை சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பயிற்சி எடுக்கும் தொடராக நாங்கள் எடுத்துக் கொள்ளவில்லை. எங்களுக்கு இது மிகவும் முக்கியமான தொடர். நாங்கள் இந்தத் தொடரில் டாமினேட் செய்து மற்ற தொடரைப் போலவே வெற்றி பெற உள்ளோம்” எனக் கூறினார். மொத்தத்தில் அபிஷேக், ஜெய்ஸ்வால் போட்டிக்கு வந்துள்ளதால் இனிமேல் சுப்மன் கில் சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement