என்னுடைய 3 ஆவது இடத்தில் இறங்கி சி.எஸ்.கே அணிக்காக இவரே விளையாட வேண்டும் – ரெய்னா வேண்டுகோள்

- Advertisement -

இந்த வருடம் நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான சுரேஷ் ரெய்னா தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியதாக அறிவித்தார். ஆனால் அவருக்கும் அணி நிர்வாகத்திற்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பில் காரணமாகவே அவர் இந்த தொடரில் இருந்து வெளியேறினார் என்ற ஒரு தகவலும் வெளியானது. அதனைத் தொடர்ந்து ரெய்னாவின் இடத்தில் யார் இறங்குவார்கள் என்று கேள்வி ரசிகர்களிடையே பெரும் அளவு எழும்பி இருந்தது.

Raina-1

- Advertisement -

அதற்கான வீரரையும் சிஎஸ்கே அணி நிர்வாகம் தயார்படுத்த துவங்கியுள்ளது. இந்நிலையில் தற்போது தான் விட்டுச்சென்ற இடத்தை நிரப்ப சரியான ஆள் யார் என்பது குறித்து சுரேஷ் ரெய்னா பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : முதலில் ஐபிஎல் அட்டவணை வெளியாகட்டும் எல்லாம் சரியாக நடந்தால் நான் மீண்டும் அணியில் இணைந்து விளையாடுவேன் என்றும் கூறியுள்ளார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : தற்போது சிஎஸ்கே அணியில் என்னுடைய மூன்றாம் இடம் காலியாக இருப்பதால் அந்த இடத்தில் இறங்கி விளையாட தோனி தான் சரியான நபர் என்று கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : 2005 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் அவர் மூன்றாவது வீரராக இறங்கி 148 ரன்கள் அடித்ததை யாராலும் மறக்க முடியாது.

raina

எனவே அந்த வகையில் தோனி மூன்றாவது இடத்தில் விளையாடிய அனுபவம் உள்ளவர் எனவே அவர் சிஎஸ்கே அணியில் மூன்றாவது இடத்தில் இறங்கி தனது பழைய அதிரடியை மீண்டும் காண்பிக்க வேண்டும் என்றும் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். மேலும் தோனி தனிநபராக விளையாடி ஆட்டத்தின் போக்கை மாற்றும் திறமை கொண்டவர் என்றும் அவர் பாராட்டியுள்ளார்.

raina

அதுமட்டுமின்றி தான் இந்தியா திரும்பினாலும் தினந்தோறும் பயிற்சி எடுத்து வருவதாகவும் தன்னை பிட்டாகவும் தயாராக வைத்திருப்பதாகவும் ரெய்னா கூறியுள்ளார். ஐபிஎல் அட்டவணை வெளியானதும் சூழ்நிலையை சரியாக அமைந்தால் மீண்டும் சுரேஷ் ரெய்னா அணியில் இணைய தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ரெய்னா விலகியது சிஎஸ்கே அணிக்கு ஒரு பெரிய இழப்பாக பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ஹர்பஜன் சிங்கும் இந்த தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement