ஏமாற்றம் அளிக்கும் சுரேஷ் ரெய்னா. 2 ஆவது பாதியிலும் சொதப்பல் தானா ? – ரசிகர்கள் கவலை

Raina
- Advertisement -

இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய ஐபிஎல் தொடரானது 29 போட்டிகள் முடிவடைந்த நிலையில் வீரர்களுக்கிடையே ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் மீதமுள்ள 31 போட்டிகள் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது என்ற அறிவிப்பு வெளியானதிலிருந்து ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இதன் காரணமாக இந்த ஐபிஎல் தொடரில் பங்கு பெறும் அணிகள் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் பயணித்துள்ளனர்.

CSK

- Advertisement -

அந்த வகையில் தற்போது முதல் அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி, துணை கேப்டன் ரெய்னா மற்றும் உத்தப்பா ஆகிய வீரர்களுடன் ஐக்கிய அமீரகம் சென்றடைந்தது. மேலும் ஆறு நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு தற்போது இரண்டு கொரோனா பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னர் வீரர்கள் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதியில் சுரேஷ் ரெய்னா பார்ம் எவ்வாறு இருக்கும் என்பது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாட சுரேஷ்ரெய்னா இந்த ஆண்டு முதல்கட்ட போட்டிகளின்போது எதிர்பார்த்த அளவிற்கு பெரிய ஆட்டத்தை அளிக்கவில்லை.

raina

அதுமட்டுமின்றி தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் பயிற்சியிலும் கூட அவர் முன்பை விட சற்று உடல் பருமனாகவும், ரன்களை ஓடி எடுக்க சிரமப்படுவதாகவும் தெரிகிறது. இதன் காரணமாக அவர் இரண்டாவது பாதியிலும் பெரிதளவு ஏமாற்றத்தையே தருவார் என்று தோன்றுகிறது. எப்போதுமே சிஎஸ்கே அணிக்காக விக்கெட் விழுந்த பின்னர் அதிரடி ரன் குவிப்பில் ஈடுபடும் ரெய்னா இந்த ஆண்டு முழுவதும் பெரிதளவில் ரன் குவிக்காமல் திணறி வருகிறார்.

மேலும் இரண்டாவது பாதியிலும் அவர் சொதப்பும் பட்சத்தில் அடுத்த ஆண்டு அவர் விளையாடுவது சந்தேகம் ஆகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement