வீடியோ : பேட் உடைந்து பரிதாபமாக ஆட்டமிழந்து வெளியேறிய சுரேஷ் ரெய்னா – இதை பாத்தீங்களா ?

Raina
- Advertisement -

14-வது ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாகத்தின் முதலாவது போட்டி நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தோனி தலைமையிலான சென்னை அணியில் டெய்ல் என்டர்கள் வரை சிறப்பான பேட்ஸ்மேன்கள் இருப்பதனால் அதிரடியான ரன் குவிப்பில் ஈடுபடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 156 ரன்களை மட்டுமே குவித்தது.

raina 1

- Advertisement -

இந்த போட்டியில் சி.எஸ்.கே அணியின் முன்னணி நட்சத்திர இடதுகை ஆட்டக்காரர் சுரேஷ் ரெய்னா 6 பந்துகளை சந்தித்து 4 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார். துவக்கத்திலேயே ஒரு பவுண்டரி அடித்து தனது சிறப்பான பார்மை காண்பித்த சுரேஷ் ரெய்னா தொடர்ச்சியாக ரன்களை குவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் டிரென்ட் போல்ட் வீசிய பந்தை தூக்கி அடிக்க நினைத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.

ரெய்னா ஸ்டம்பில் இருந்து சற்று விலகி பேட்டை சுழற்ற பந்து டாப் எட்ஜ் ஆகி பாயிண்ட் திசையில் இருந்த ராகுல் சாகரின் கைகளுக்கு செல்ல ரெய்னா பரிதாபமாக ஆட்டமிழந்து வெளியேறினார். அதோடு அவரது பேட்டின் அடிபகுதியில் இருந்த சிறிது பாகமும் உடைந்து விழுந்தது. இதனால் பால் சரியாக கனெக்ட் ஆகாமல் சுரேஷ் ரெய்னா பரிதமாக ஆட்டமிழந்து வெளியேறினார்.

பின்னர் சுதாரித்து ஆடிய சென்னை அணி 15 ஓவர்கள் முடிவில் 87 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையிலிருந்து இறுதியாக 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 136 ரன்களை மட்டுமே குவிக்க 20 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement