கடந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் நான் விளையாடாததன் உண்மை காரணம் இதுதான் – சுரேஷ் ரெய்னா பேட்டி

Raina

இந்தியாவில் நடைபெற இருந்த 13வது ஐபிஎல் தொடர் கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா தாக்கம் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் கடுமையான பாதுகாப்பு வளையத்தில் பி.சி.சி.ஐ-யின் சிறப்பான முயற்சிகளால் வெற்றிகரமாக முடிவடைந்தது. இந்த தொடரில் ரோகித் சர்மாவின் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி அபாரமாக விளையாடி ஐந்தாவது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது. இந்த தொடரில் எந்தவொரு அணியாலும் மும்பை அணிக்கு ஈடுகொடுக்க முடியவில்லை.

இந்த தொடரின் ஆரம்பத்தில் இருந்தே சிஎஸ்கே அணியில் ஏற்பட்ட பிரச்சனையால் இதுவரை எப்போதும் இல்லாத வகையில் வரலாறு காணாத வகையாக பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் சிஎஸ்கே அணி வெளியேறியது. இந்த தோல்விகளுக்கு எல்லாம் முக்கிய காரணமாக சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் ஆகியோரது விலகல் மற்றும் அணியில் உள்ள மூத்த வீரர்களின் ஆட்டம் சரியாக அமையாது என பல விஷயங்கள் பேசப்பட்டது.

குறிப்பாக சுரேஷ் ரெய்னா தொடரின் ஆரம்பத்திலேயே துபாய் வந்து நாடு திரும்பியது அணியை பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவர் நாடு திரும்புவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் சிஎஸ்கே அணியுடனான கருத்து வேறுபாடு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் தற்போது தான் ஏன் இந்தியா திரும்பினேன் என்பதற்கான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சுரேஷ் ரெய்னா பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது :

Raina-1

இந்த விடயத்தில் நான் ஏன் வருத்தப்பட வேண்டும். நான் இந்தியா திரும்பிய பிறகு எனது குழந்தை மற்றும் குடும்பம் என அவர்களுடன் நேரத்தை செலவிட்டேன். ஆனால் நான் இந்தியா திரும்பியதற்கான உண்மையான காரணம் யாதெனில் பஞ்சாபில் இருந்த எனது மாமாவின் குடும்பம் திருடர்களால் தாக்கப்பட்டதால் தான் நான் இந்தியா திரும்பினேன். அந்த சமயத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருந்ததால் எனது மனைவியும் நாடு திரும்ப சொன்னார்.

- Advertisement -

Raina-1

20 வருடங்களாக கிரிக்கெட் விளையாடி வருகிறேன். என்னால் இன்னும் சிறப்பாக கிரிக்கெட் விளையாட முடியும். இருப்பினும் தேவையான நேரத்தில் குடும்பத்திற்கும் நாம் உதவியாக இருக்க வேண்டும். அதனால் ஆபத்தில் இருந்த எனது குடும்பத்தின் நிலையை அறிந்தே நான் இந்தியா திரும்பினேன் இது புத்திசாலித்தனமான முடிவு தான் என்று ரெய்னா கூறியது குறிப்பிடத்தக்கது.