140 கி.மீ வேகத்தில் வரும் பந்துகளை கூட இவரால் எளிதாக சிக்ஸ் அடிக்கமுடியும் – ரெய்னா புகழாரம்

raina
- Advertisement -

மகேந்திர சிங் தோனி கடந்த வருட உலக கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் ரன் அவுட்டாகி வெளியேறினார். அத்துடன் இந்தியாவின் உலகக்கோப்பை கனவு பறிபோனது. அதன் பின்னர் இவர் கிரிக்கெட் போட்டிகளில் ஆடவே இல்லை. அடுத்தடுத்து இந்தியா கலந்து கொண்ட அனைத்து போட்டிகளில் இருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டார்.

Dhoni

- Advertisement -

இதன் காரணமாக அவர் ஓய்வு அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஐபிஎல் தொடர் நெருங்கும்போது திடீரென பயிற்சியை துவக்கினார். ஆனால் அவரது பயிற்சிக்கு கொரோனா வைரஸ் முட்டுக்கட்டை போட்டது. ஐபிஎல் தொடர் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை நடக்கிறது.

இதற்காக தோனி மீண்டும் தனது பயிற்சியை துவக்கி இருக்கிறார். இதுகுறித்து தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா பேசியிருக்கிறார். அவர் கூறுகையில்… வயது என்பது தோனிக்கு ஒரு தடைகல் போன்றதுதான். அவர் அதனை கண்டு கொள்ளவே இல்லை. அவர் மிகச் சிறந்த விளையாட்டு வீரர்.

Raina

அவரது ஆட்டத்திறன் எப்படி இருக்கும் என்பத எனக்கு தெரியும். 140 கிலோ மீட்டர் வேகத்தில் வரும் பந்துகளை சிக்சர் அடிப்பது மிகவும் கடினம். ஆனால் தோனியை அதை மிகவும் எளிமையாக செய்வார். இந்த வருட ஐபிஎல் தொடரில் தல தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்களை கண்டிப்பாக நீங்கள் பார்க்கலாம் என்று நம்பிக்கையாக தெரிவித்துள்ளார் சுரேஷ் ரெய்னா.

Dhoni

ஏற்கனவே தற்போது மீண்டும் பயிற்சியை துவங்கியுள்ள தோனி நிச்சயம் ஐ.பி.எல் தொடரில் அசத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த தொடரில் சிறப்பாக விளையாடுவதன் மூலம் மீண்டும் இந்திய அணியில் இணையும் முனைப்புடன் தோனி செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement