- Advertisement -
இந்திய கிரிக்கெட்

எதுவுமே தெரியாம யாரும் பேசாதீங்க. தப்பு தப்பா சொல்லி உங்களுக்கு என்ன லாபம் இருக்கு – ரெய்னா ஆவேசம்

கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு சர்வதேச அளவில் 7 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தற்போது இதன் தாக்கம் உலகம் முழுவதும் அதிகரித்துள்ளது. இதனால் உலகம் எங்கும் தற்போது மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

மேலும் மக்கள் வேறு எதைப் பற்றியும் சிந்திக்காத நிலையில் இந்த வைரஸ் தாக்கத்தை எப்படி தடுப்பது ஒன்றே தங்களது வேலையாக செய்து வருகின்றனர். இதனால் பலர் தங்களது சொந்தங்களை இழந்து பரிதவித்து வருகின்றனர். உலகெங்கிலும் தற்போது சாதாரணமான சூழ்நிலை விலகி அசாதாரணமான நிலைமை இருந்து வருகிறது.

- Advertisement -

இந்திய அளவிலும் இந்த நிலைமை தற்போது மோசமடைந்து வருகிறது. தமிழ்நாட்டிலும் பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்கம், ஷாப்பிங் மால்கள் என பொதுமக்கள் கூடும் அனைத்து இடங்களும் மூடப்பட்டுள்ளன. மேலும் சர்வதேச அளவிலும் சரி இந்திய அளவிலும் சரி பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மட்டுமின்றி பொது நிகழ்ச்சிகள், அரசாங்க நிகழ்ச்சிகள், தனியார் நிகழ்ச்சிகள் என அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

மேலும் கொரோனா வைரஸ் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலதரப்பட்ட தரப்பிலிருந்தும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்திய அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனா வைரஸ் குறித்து உருக்கமான வீடியோ ஒன்றினை பதிவிட்டிருந்தார்.

- Advertisement -

அதனை தொடர்ந்து தற்போது சிஎஸ்கே அணியின் முன்னணி வீரரான சுரேஷ் ரெய்னா தனது ட்விட்டர் பக்கத்தில் குறித்த பதிவை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் ககுறிப்பிட்டதாவது : கொரோனா குறித்த தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் கூட்டம் அதிகமான இடங்களுக்கு செல்வதைத் தவிர்க்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். அதுமட்டுமின்றி கொரோனா பற்றி முழுமையாக தெரியாமல் தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் தவறான செய்திகள் மூலம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம். அது நல்லதல்ல தயவு செய்து இது போன்று யாரும் செய்ய வேண்டாம் என்று அவர் மக்களை வேண்டிக் கேட்டுக் கொண்டுள்ளார். அதுமட்டுமின்றி கொரோனா பாதிப்பில் இருந்து நம்மை பாதுகாக்கலாம் அதற்கு சுகாதார நிபுணர்கள் பேச்சை கேளுங்கள் என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by