அவர் இல்லாம 3 வகையான கிரிக்கெட்டே இல்ல, அசால்ட்டா சதங்களை அடிப்பாரு – நட்சத்திர வீரருக்கு ரெய்னா ஆதரவு

Raina-2
- Advertisement -

வரும் பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் துவங்கும் வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் வென்று ஜூன் மாதம் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு இந்தியா தகுதி பெறுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதற்கிடையில் அதற்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் இளம் வீரர் சர்பராஸ் கானுக்கு பதிலாக சூரியகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளது நிறைய சர்ச்சைகளையும் விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் கடந்த 3 வருடங்களாக ரஞ்சி கோப்பையில் தொடர்ந்து ரன் மெஷினாக பெரிய ரன்களை குவித்து வரும் அவர் ஜாம்பவான் டான் பிராட்மேனனுக்கு பின் உள்ளூர் முதல் தர கிரிக்கெட்டில் அதிக பேட்டிங் சராசரியை (80) கொண்ட வீரராக செயல்பட்டு வருகிறார்.

Suryakumar yadav sarfaraz khan

அப்படிப்பட்ட அவரை விட்டுவிட்டு வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு உச்சகட்ட பார்மில் இருக்கிறார் என்பதற்காக உள்ளூர் முதல் தர கிரிக்கெட்டில் 45க்கும் குறைவான பேட்டிங் சராசரியை கொண்டுள்ள சூரியகுமார் யாதவை தேர்வு செய்தது ரஞ்சிக் கோப்பைக்கு நிகழ்த்தப்பட்ட அவமானம் என்று நிறைய முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் விமர்சித்து வருகிறார்கள். இதற்காக சூரியகுமார் யாதவ் சுமாராக செயல்பட்டுள்ளார் என்றும் சொல்ல முடியாது. ஏனெனில் உள்ளூர் முதல் தர கிரிக்கெட்டில் அவரும் 14 சதங்கள் 28 அரை சதங்கள் உட்பட 5549 ரன்களை 44.75 என்ற நல்ல சராசரியில் எடுத்து மும்பை அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார்.

- Advertisement -

ரெய்னா ஆதரவு:
அந்த வகையில் நல்ல அனுபவத்தை கொண்டுள்ள அவர் இந்தியாவுக்காக முதலில் டெஸ்ட் அணியில் விளையாடுவதற்கு தான் கடுமையாக போராடினார். அதனாலயே கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் முதல் முறையாக தேர்வான அவருக்கு விளையாடும் 11 பேர் அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் ஐபிஎல் தொடரில் அபாரமாக செயல்பட்டு டி20 கிரிக்கெட்டிலும் முரட்டுத்தனமாக செயல்பட்டு வருவதால் தற்போது அவரை அனைவரும் டி20 வீரராக மட்டுமே பார்க்கிறார்கள்.

Suryakumar Yadav 1

எனவே டி20 மட்டுமல்லாமல் டெஸ்ட் உட்பட 3 வகையான கிரிக்கெட்டிலும் சூரியகுமார் யாதவ் அசத்தும் திறமை கொண்டுள்ளார் என்று பாராட்டும் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா அவர் இல்லாமல் இந்திய அணியே இல்லை என்று தெரிவித்துள்ளார். இது பற்றி ஜியோ சினிமா சேனலில் அவர் பேசியது பின்வருமாறு. “தற்சமயத்தில் அவர் சிறப்பாக செயல்படும் விதத்திற்கு அவர் நிச்சயமாக 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாட வேண்டும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை”

- Advertisement -

“சொல்லப்போனால் அவர் இல்லாத 3 வகையான கிரிக்கெட்டே இருக்க முடியாது. அவர் செயல்படும் விதமும் அவர் அதிரடி காட்ட நினைக்கும் விதமும் வித்தியாசமான ஷாட்களை அடிக்கும் விதமும் அபாரமாக உள்ளது. மேலும் பயமின்றி விளையாடும் அவருக்கு மைதானத்தின் பவுண்டரி எல்லைகளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதும் தெரிந்துள்ளது. மும்பை வீரரான அவருக்கு எப்படி சிவப்பு நிற பந்து கிரிக்கெட்டில் அசத்த வேண்டும் என்பதும் தெரியும்”

Raina

எனவே அவருக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவது ஒருநாள் கிரிக்கெட்டிலும் அவர் சிறந்து விளங்குவதற்கு உதவும். மொத்தத்தில் வாய்ப்பு கிடைத்தால் அவர் பலமுறை சதங்களையும் இரட்டை சதங்களையும் அடிப்பார்” என்று கூறினார்.

இதையும் படிங்க:IND vs NZ : சாதிக்குமா இளம் படை – முதல் டி20 நடைபெறும் ராஞ்சி மைதானம் எப்படி? புள்ளிவிவரங்கள், பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

முன்னதாக டி20 கிரிக்கெட்டிலேயே தாமதமாக 30 வயதில் அறிமுகமான சூரியகுமார் யாதவ் தற்போது 32 வயதை கடந்து விட்டதால் இதை விட்டால் வேறு வாய்ப்பு கொடுக்க முடியாது என்று கருதியே தேர்வுக்குழுவும் அவருக்கு சரியான நேரத்தில் வாய்ப்பு கொடுத்துள்ளது. அதை விட டெஸ்ட் அணியில் அதிரடியாக விளையாடும் ரிசப் பண்ட் காயமடைந்ததால் அவரைப் போல் அதிரடியாக விளையாடி போட்டியை மாற்றக்கூடிய ஒருவர் தேவை என்பதாலேயே சூரியகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement