இத்தனை வருடங்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய சுரேஷ் ரெய்னா திடீரென துபாய்க்கு வந்தவுடன் ஒரு சிறிய சண்டை காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துவிட்டு இந்தியா திரும்பிவிட்டார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் இந்த சம்பவம் நடைபெற்றது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மிகப்பெரிய தூணாக இருந்து சுரேஷ் ரெய்னா இல்லாமல் தற்போது சென்னை அணி விளையாடாதது, அந்த அணிக்கு பாதகமாகஇருக்கிறது. ஹோட்டல் அறை காரணமாக ஏற்பட்ட முரண்பட்ட கருத்து காரணமாக சுரேஷ் ரெய்னா தொடரில் இருந்து வெளியேறிவிட்டார் என்ற கருத்து நிலவி வருகிறது.
அதனை தொடர்ந்து அந்த அணியின் உரிமையாளர் சீனிவாசன் ,சுரேஷ் ரெய்னா இந்த வருடம் பத்து கோடியை இழக்க போகிறார் என்று தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளித்த சுரேஷ் ரெய்னா அப்படி ஒன்றும் எனக்கு பெரிதாக தெரியவில்லை, சீனிவாசன் எனது தந்தையைப் போன்றவர் அவர் கூறுவதை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்றும் தெரிவித்திருந்தார்.
மேலும் மீண்டும் என்னை நீங்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முகாமில் பார்க்க வாய்ப்பு இருக்கிறது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். ஆனால் இந்த வருடம் அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அணியில் சேர்த்துக் கொள்ளவில்லை.
Wishing you all the success boys @ChennaiIPL. Unimaginable for me that I’m not there today, but all my wishes are with you. Sending you all the good vibes! Go get it! 💪 #WhistlePodu https://t.co/G48ybhcbYR
— Suresh Raina🇮🇳 (@ImRaina) September 19, 2020
இதன் காரணமாக மனம் நெகிழ்ந்து முதல் போட்டியில் அன்று ஒரு ட்வீட் செய்துள்ளார். நேற்று மும்பை மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையே முதல் போட்டி நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வாழ்த்து தெரிவித்த ட்வீட் செய்துள்ளார் ரெய்னா.
அதாவது சென்னை வீரர்களுக்கு வாழ்த்துக்கள். நான் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இல்லை என்பது என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை. உங்களுக்காக நான் இருக்கிறேன் வெற்றி பெற்று திரும்ப வாழ்த்துக்கள் பாய்ஸ் என்று தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் சுரேஷ் ரெய்னா.