எனக்கு சி.எஸ்.கே அணியின் துணைக்கேப்டன் பதவி வேண்டாம். இவரே இந்த துணை கேப்டனாக செயல்படுவார் – ரெய்னா ஓபன் டாக்

- Advertisement -

இந்த ஆண்டு 13 ஆவது ஐபிஎல் சீசன் தொடர் அடுத்த மார்ச் மாதம் 29 ஆம் தேதி துவங்க உள்ளது. மேலும் இந்த ஆண்டுக்கான போட்டி அட்டவணை பட்டியல் வெளியாகியுள்ள நிலையில் ஏற்கனவே ஏலம் முடிவடைந்த நிலையில் சென்னையில் சிஎஸ்கே அணி வீரர்கள் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்கள்.

csk

- Advertisement -

அதிலும் குறிப்பாக சென்னை அணி வீரர்களான சுரேஷ் ரெய்னா மற்றும் அம்பதி ராயுடு ஆகியோர் இந்த மாதத் துவக்கத்திலேயே சென்னையில் வந்து முதல்கட்ட பயிற்சியை மேற்கொண்டு வந்தனர். மேலும் அடுத்த கட்டமாக மார்ச் 1 ஆம் தேதி முதல் இரு வாரங்கள் பயிற்சி நடைபெற இருக்கிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதில் தோனியும் கலந்துகொள்ள இருக்கிறார்.

இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடர் குறித்து பேட்டியளித்த சுரேஷ் ரெய்னா கூறுகையில் : சென்றமுறை தோனி விளையாட முடியாத போட்டிகளில் நான் சென்னை அணிக்கு கேப்டனாக செயல்பட்டேன். ஆனால் அந்த போட்டிகளில் கேப்டனாக என்னால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. அதனால் இம்முறை நான் துணை கேப்டனாக செயல்பட போவதில்லை எனக்கு பதிலாக முன்னணி அதிரடி வீரரான ஷேன் வாட்சன் சென்னை அணி துணைக் கேப்டனாக செயல்பட உள்ளார்.

Watson

ஷேன் வாட்சன் ஆஸ்திரேலிய அணியை பல ஆண்டுகள் வழிநடத்தியவர். மேலும் பல ஆண்டுகள் கேப்டன்சி செய்து அனுபவம் உடையவர் எனவே அவரது அனுபவம் நிச்சயம் சென்னை அணிக்கு கைகொடுக்கும் என்பதால் இம்முறை அவரை துணை கேப்டனாக விளையாடுவார் என்று ரெய்னா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement