இந்திய டெஸ்ட் அணியின் முதுகெலும்பே ரிஷப் பண்ட் தான்.. அதுக்கு காரணம் இருக்கு – சுரேஷ் ரெய்னா கருத்து

Raina and Pant
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் அற்புதமான பேட்டிங் பார்மை வெளிப்படுத்தி வருகிறார். இந்த தொடரின் ஆரம்பத்திலிருந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர் ரன் குவிப்பிலும் வேகம் காட்டுவதால் அவர் பேட்டிங் செய்யும்போது இங்கிலாந்து அணியே வியந்து பார்த்து வருகிறது. இந்த தொடரில் இதுவரை அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலிலும் அவர் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.

இந்திய அணியின் முதுகெலும்பே ரிஷப் பண்ட் தான் : சுரேஷ் ரெய்னா

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று முடிந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது விக்கெட் கீப்பிங் செய்கையில் கை விரலில் காயம் அடைந்தாலும் இரண்டு இன்னிங்ஸ்களிலும் வலியுடன் பேட்டிங் செய்திருந்தார். அதன் காரணமாக நான்காவது டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடுவாரா? மாட்டாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

- Advertisement -

ஆனாலும் ரிஷப் பண்ட் இந்திய அணியின் முக்கிய வீரர் என்பதனால் நான்காவது போட்டியில் அவர் விளையாடியே ஆக வேண்டும் என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நாளை மான்செஸ்டர் நகரில் துவங்க இருக்கும் இந்த நான்காவது போட்டிக்கான இந்திய அணியில் அவர் முழுநேர பேட்ஸ்மேனாக விளையாடுவார் என்று தெரிகிறது.

அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பராக துருவ் ஜுரேல் இடம் பிடிப்பார் என்றும் தெரிகிறது. இந்நிலையில் நாளைய இந்த போட்டிக்கு முன்பாக ரிஷப் பண்ட் குறித்து பல்வேறு கருத்துக்களை பல்வேறு முன்னாள் வீரர்களும் அளித்து வரும் வேளையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா அவரை பாராட்டி சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் சுரேஷ் ரெய்னா கூறியதாவது :

- Advertisement -

ரிஷப் பண்ட் இந்திய அணியின் முதுகெலும்பாக திகழ்கிறார். ஏனெனில் பேட்டிங் மட்டுமின்றி கீப்பிங்கிலும் அவர் இந்திய அணிக்கு எனர்ஜியை கொண்டு வருகிறார். குறிப்பாக ஸ்டம்பிற்கு பின்னால் நிற்கும் அவர் அனைத்து பந்துவீச்சாளர்களுக்கும் நம்பிக்கை கொடுக்கும் வகையில் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறார். அதிலும் குறிப்பாக ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் போன்ற வீரர்கள் பந்து வீசும்போது அவர்களுக்கான ஊக்கத்தையும் கொடுத்து எங்கு பந்துவீச வேண்டும் என்பது போன்ற சில ஆலோசனைகளையும் வழங்குகிறார்.

இதையும் படிங்க : விரோதமான இங்கிலாந்தில் அவர மாதிரி கேப்டனாக கில் செஞ்சது எனக்கு பிடிச்சுருக்கு.. பாண்டிங் பேட்டி

அதோடு பேட்டிங்கில் மிக இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் அவர் அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபடுகிறார். அதனால் எப்போது அவர் களத்திற்கு வந்தாலும் இங்கிலாந்து அணியின் வீரர்கள் பவுண்டரி லைனில் பீல்டிங் செய்ய செல்கின்றனர். இந்த தலைமுறையில் மிகச் சிறந்த பிளேயராக உருவெடுத்து வரும் அவருக்கு கேப்டனின் ஆதரவும், பயிற்சியாளரின் ஆதரவும் கிடைப்பது வரவேற்கக் கூடிய ஒன்றுதான் என சுரேஷ் ரெய்னா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement